``இடம் மாறியிருப்பதால் இவ்வளவு துதிபாட வேண்டிய அவசியமில்லை." - செங்கோட்டையன் ``திட்டங்களை நிறைவேற்ற 5 ஆண்டு கால அவகாசம் இருக்கிறது. மூன்றே மாதங்களில் சரித்திரம் படைக்க முடியாது." - ஓ.பி.எஸ்ஸூக்கு செங்கோட்டையன் பதில் ஓ.பி.எஸ்: ``தேர்தல் அறிக்கையை தங்களின் முன்னோடி திட்டமாக தவெக அறிவித்தது. அந்த அறிவிப்புகளை கூட நிறைவேற்றாததால் மக்கள் ஏமாந்து நிற்கின்றனர்." செங்கோட்டையன்: ``தமிழகமே பாராட்டும் தூய ஆட்சியை பற்றி ஏமாற்றத்திற்குரிய ஆட்சி என விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது. இடம் மாறியிருப்பதால் இவ்வளவு துதிபாட வேண்டிய அவசியமில்லை." ஓ.பி.எஸ்: ``இடத்தை முதலில் மாற்றியது செங்கோட்டையன் தான்." ராஜ்மோகன்: ``செங்கோட்டையன் அவர்கள் இடம் மாறினாலும் அவர் இதயத்தில் இருக்கும் படத்தை தலைவர் மாற்ற சொல்லவில்லை. அண்ணனுடைய பாக்கெட்டை பார்க்கையில் இடமும் மாறியிருக்கிறது இதயமும் மாறியிருக்கிறது." ராஜ்மோகன் ஆதவ் - ``செங்கோட்டையன் அண்ணன் இடம் மாறினாலும் அவர் இதயத்தில் புரட்சித் தலைவி அம்மாவின் படமே இருக்கிறது. ஆனால், அம்மாவால் முதல்வராக்கப்பட்டவரிம் சட்டையில் யார் படம் இருக்கிறது என்பது மக்களுக்கு தெரியும்." ஓ.பி.எஸ் - ``பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், அம்மா இவர்களையெல்லாம் நாங்கள் கடைசி வரை நெஞ்சில் வைத்திருப்போம். படத்தை காட்டி ஏமாற்றும் பழக்கம் எங்களுக்கில்லை. என்னை பற்றி உங்களுக்கு 200% தெரியும். எந்த நிலையிலும் மாற மாட்டேன். திராவிட இயக்கங்களுக்குள்தான் சுற்றி சுற்றி வந்திருக்கிறேன். கடந்த 5 ஆண்டுகாலமாக தமிழகத்தின் உரிமைகளை எந்நாளும் விட்டுக்கொடுக்கமாட்டேன் என போராடிய முன்னாள் முதல்வருக்கு நன்றி சொல்லும் வகையில்தான் அவர் படத்தை பையில் வைத்திருக்கிறேன்." என்றார். "ஆயிரம் கைகளை நீட்டி ஆதவனை மறைப்பதைப் போல." - ஓ.பி.எஸ் "ஆயிரம் கைகளை நீட்டி ஆதவனை மறைப்பதைப் போல மகளிர் உரிமைத் தொகையின் பெயரை மாற்றியிருக்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகை உயரும் என எதிர்பார்த்து மகளிர் ஏமாந்து போயிருக்கின்றனர். நல்லதும் மாற்றம்தான் கெட்டதும் மாற்றம்தான். மக்கள் எதிர்பார்த்து வாக்களித்து ஏமாந்து போயிருக்கின்றனர்"- ஓ.பி.எஸ் "நீட் ஒழிப்பே தீர்வு என்பதுதான் எங்களின் நிலைப்பாடு"- ராஜ்மோகன் சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "மக்களை பிளவுப்படுத்தாமல் ஒன்றிணைக்க வேண்டும். சிறுபான்மை மக்களின் சமூகப்பணியை கல்விப்பணியை பாதிக்கிற வகையில் எதையும் செய்யக்கூடாது. நீட் ஒழிப்பே தீர்வு என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. கல்வி மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். மாணவர்கள் மக்கள் மன்றத்தில் போராடுவார்கள். இந்த அரசு சட்டமன்றத்தில் போராடும்" என்று தெரிவித்திருக்கிறார். இன்றைய சட்டமன்றக் கூட்டம்! சட்டமன்றக் கூட்டத்தொடர் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்த நிலையில், இன்று நீட் தேர்வு மற்றும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா ஆகியவற்றுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனித்தீர்மானம் நிறைவேற்றவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை கடந்த 2021-இல் தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. எனினும், இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் அப்போது ஒப்புதல் அளிக்கவில்லை. த.வெ.க அருண் ராஜ் தொடர்ந்து நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, மாணவர்களின் தற்கொலை உள்ளிட்டவைகளை முன்னிட்டு மத்திய அரசு நடத்தி வரும் நீட் தேர்வை திரும்ப பெற்று மாநில மருத்துவ பாடத்திட்ட மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும், இந்தத் தனித் தீர்மானத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தாக்கல் செய்வார் எனவும் கூறப்படுகிறது. இதேபோல், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதாவை தற்போதைய வடிவில் திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தாக்கல் செய்வார் எனவும் கூறப்படுகிறது. இந்தத் தீர்மானங்களின் மீது விவாதம் இன்றே நடத்தப்பட்டு மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. முன்னதாக நேற்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்டுக்கு நீங்கள் அளிக்கும் மதிப்பெண்கள். மக்கள் கருத்து? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/news-regarding-the-legislative-assembly-today




