த.வெ.க. சார்பில் முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி சென்னை துறைமுகம் தொகுதியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு 'முதல்வரின் கரம்' என்ற தலைப்பில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், நிதி அமைச்சர் மரிய வில் சன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ள தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தனியாக தணிக்கை அறிக்கையை வெளியிட போகிறோம். அந்த ஊழல் பட்டியலில் என்ன இருக்கிறது என்பது அப்போது உங்களுக்கு தெரியும். 'நீட்' தேர்வு விவகாரம் நீங்கள் (எதிர்க்கட்சி) ஒருமையில் பேசி எங்களை கோபப்படுத்தினாலும் நாங்கள் உங்களை போன்று பேச மாட்டோம். உங்களுடைய ஊழல் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு பேசப்போகிறோம். ஊழல், லஞ்சம் இல்லாத தமிழ்நாட்டில் அனைவரும் வாழ போகிறோம். 100 சதவீதம் நம்பிக்கையுடன் இருங்கள். இந்த நோக்கத்தை சிதைப்பதற்காக இந்த ஆட்சி 60 நாட்கள், 3 மாதம், 6 மாதம் என்று சில பேர் பேசுகிறார்கள். அவர்கள்தான் 5 மாதத்தில் ஆள், 'அட்ரஸ்' இல்லாமல் போக போகிறார்கள். தற்போது 'நீட்' தேர்வை தடை செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றது. மாணவர்கள் நம்பிக்கையுடன் இருங்கள். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் எப்படி பெரிய மாற்றம் வந்ததோ, அதே போன்று 'நீட்' விவகாரத்தில் நிரந்தர தீர்வை பெற 2029 நாடாளுமன்ற தேர்தலில் நம்முடைய தலைவர் (முதல்-அமைச்சர் விஜய்) மூலம் சாதிக் கக்கூடிய எல்லா திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்படும். இதை இந்த நாடு பார்க்க போகிறது. இவ்வாறு அவர் பேசினார். 100 சதவீதம் நன்மை இருக்கும் விழா முடிந்ததும் அமைச்சர் மரிய வில்சனிடம், 'தமிழக பட்ஜெட்டில் ஊழல் பட்டியல் வெளியிட போகிறோம் என்று சொல்லி இருக்கிறீர்கள். அதில் எந்த மாதிரியான ஊழல்கள் இடம் பெற்றுள்ளது? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'பொறுத்திருந்து பாருங்கள் என்று பதிலளித்தார். மேலும் அவர், 100 சதவீதம் மக்களுக்கு நன்மை அளிக்க கூடிய பட்ஜெட்டாக த.வெ.க. அரசின் பட்ஜெட் இருக்கும்' என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/list-of-dmks-corrupt-acts-to-be-released-during-the-budget-session-minister-maria-wilson-makes-sensational-remarks




