தூத்துக்குடி, தூத்துக்குடி நகர்ப்புற துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை மறுநாள் (7.7.2026, செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி நகர்ப்புற மின் விநியோக செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி நகர்ப்புற துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை மறுநாள் (7.7.2026, செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நகரின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் போல்பேட்டை, ஆண்டாள்தெரு, சத்திரம்தெரு, 1-ஆம் கேட், 2-ஆம் கேட், மட்டக்கடை, வடக்கு பீச்ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, எட்டையாபுரம் ரோடு, தெப்பகுளம் தெரு, சிவன் கோவில் தெரு, வ.உ.சி ரோடு, ஜெயிலானி தெரு. வடக்கு காட்டன் ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதர நகர், சண்முகபுரம், மேலசண்முகபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம், இஞ்ஞாசியார்புரம். எழில்நகர், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், முத்தம்மாள்காலனி, சுந்தரவேல்புரம், அம்பேத்கார்நகர், குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, முனியசாமிபுரம், CGE காலனி, லெவிஞ்சிபுரம். பக்கீள்புரம், லோகியா நகர், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-the-day-after-tomorrow




