Volledig artikel
உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள குருத்வாரா ஒன்றை 6 நிஹாங்க் சீக்கியர்கள் ஆக்கிரமித்தனர். அவர்கள் குருத்வாராவின் மேல் தளத்திற்கு சென்று தடுப்பு அமைத்துக்கொண்டு இருந்தனர். பார்க்கிங் தொடர்பாக கர்னபிரயாக் என்ற இடத்தில் நடந்த மோதலில் சில நிஹாங்க் சீக்கியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கவேண்டும் என்று கோரி அவர்கள் குருத்வாராவை ஆக்கிரமித்தனர். 3 நாள்களுக்கு பிறகு இப்பிரச்னை நேற்றுதான் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் தேசிய அளவில் அவர்கள் கவனத்தை ஈர்த்துள்ளனர். யார் இந்த நிஹாங்க் சீக்கியர்கள்? நிஹாங்க் சீக்கியர்கள் நீல நிற உடை, துமல்லா தலைப்பாகை மற்றும் ஆயுதங்களால் தனித்து அடையாளம் காணப்படுகின்றனர். அவர்களின் தலைப்பாகைகள் பெரும்பாலும் சக்கரங்கள் எனப்படும் எஃகு கோட்களால் அலங்கரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் வாள்கள், ஈட்டிகள் மற்றும் பிற பாரம்பர்ய ஆயுதங்கள் அவர்களின் அடையாளத்தின் முக்கிய பகுதியாகும். கிர்பானைச் சுமக்கும் மற்ற சீக்கியர்களைப் போல நிஹாங்க் சீக்கியர்கள் ஆயுதங்களை வெறுமனே சடங்குப் பொருள்களாகப் பார்ப்பதில்லை. பாரம்பர்ய சீக்கிய நூல்கள் நிஹாங்குகளை போர்வீரர்-துறவிகள் என்று குறிப்பிடுகின்றன. அவர்களின் கடமை நம்பிக்கையைப் பாதுகாப்பது, பாதிக்கப்படக்கூடியவர்களைக் காப்பது மற்றும் எல்லா நேரங்களிலும் போருக்குத் தயாராக இருப்பது ஆகும். அகாலி நிஹாங்ஸ் என்றும் அழைக்கப்படும் நிஹாங்ஸ் ஒரு பாரம்பர்ய சீக்கிய போர்வீரர்கள் அமைப்பாகும். ஆறாவது சீக்கிய குருவான குரு ஹர்கோபி தற்காப்புக்காக நிஹாங்க் சீக்கிய அமைப்பை உருவாக்கினார். பின்னர் 1699 இல் கல்சாவின் நிறுவனர் குரு கோவிந்த் சிங் அந்த அமைப்பை மேலும் பலப்படுத்தினார். பாரம்பர்யமாக, நிஹாங்ம் சீக்கியர்கள் ஆயுதமேந்திய பாதுகாவலர்களாகப் பணியாற்றினர். 18 ஆம் நூற்றாண்டில் சீக்கியப் படைகள் மீண்டும் மீண்டும் படையெடுப்புகள் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டபோது நிஹாங்க் வல்லமைமிக்க வகையில் போராடி நற்பெயரைப் பெற்றனர். அவர்கள் பெரும்பாலும் அதிகம் நடமாடும் போர்வீரர் குழுக்களாக சண்டையிட்டனர். மகாராஜா ரஞ்சித் சிங் நிறுவிய சீக்கியப் பேரரசின் ராணுவக் கட்டமைப்பிற்குள் நிஹாங்க் பின்னர் பணியாற்றினர் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். நிஹாங்குகளின் ஆயுதங்கள் பலவீனமானவர்களை பாதுகாப்பதற்கும், மத சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும் பயன்பட்டன. அதேசமயம் அவர்களை பற்றிய சர்ச்சைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சர்ச்சையான கஞ்சா பயன்பாடு! கஞ்சாவை நிஹாங்குகள் பயன்படுத்துவது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ராணுவப் பிரசாரங்களுக்காகவும், வலியைக் குறைக்கவும் கஞ்சா பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்டதாலும் சீக்கிய அறிஞர்கள் அதனை ஏற்க தயாராக இல்லை. நீல நிற உடை வந்தது எப்படி? 1880 ஆம் ஆண்டு பிரஜ் பாஷாவில் பாபா சுமர் சிங் எழுதிய வரலாற்று உரையில், குரு கோவிந்த் சிங்கின் இளைய மகன் சாஹிப்சாதா ஃபதே சிங் நீல நிற துமல்லா உடையணிந்து ஆயுதங்களுடன் இருந்தார். குரு கோவிந்த் சிங் இந்த தோற்றத்தைப் பாராட்டியதாகவும், அத்தகைய வீரர்களை "நிஹாங் சிங்ஸ்" என்று குறிப்பிடுவதாகவும், நிஹாங்குகள் குரு கோவிந்த் சிங்கின் மகன்கள் என்று சிலர் கூறுவதற்கு இதுவே காரணம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குரு கோவிந்த் சிங்கின் மரணத்தைத் தொடர்ந்து சீக்கிய சமூகங்கள் முகலாய ஆட்சியாளர்கள் மற்றும் பின்னர் ஆப்கானிய படையெடுப்பாளர்களின் கீழ் மீண்டும் மீண்டும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டன. அதனை எதிர்கொள்ள ராணுவத் தயார்நிலை சீக்கியர்களுக்கு அவசியமானது. இந்த சூழலில் சீக்கியர்களின் ஆயுதமேந்திய முன்னணிப் படையாக நிஹாங்குகள் உருவானார்கள், சீக்கியர்களை மட்டுமல்லாது குருத்வாராக்கள், அவர்களின் பிறநிறுவனங்களின் பாதுகாப்பதற்கும் நிஹாங்க்கள் உதவியாக இருந்தனர். ஒரு நிஹாங்க் எப்போதும் ஆயுதங்களுடன் இருக்க வேண்டும் என்றும், எப்போதும் இரும்பு ஆயுதங்களை வைத்திருக்கவேண்டும் வேண்டும் என்றும், அவர்கள் தொடர்ந்து தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பது நிஹாங்க்ளின் கொள்கையாகும். சீக்கிய காலத்தில் பின்பற்றப்பற்றப்பட்ட வாழ்க்கை நடைமுறை, ஆடை மற்றும் பழக்க வழக்கங்களை இன்றைக்கும் நிஹாங்க் சீக்கியர்கள் பின்பற்றி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel — zie link hieronder




