சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம், 'அதிமுகவில் இருந்து தொடர்ந்து பலர் தவெகவில் இணைந்து வருவது' குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அவரது பதில். "இது குறித்து இதுவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதுவுமே கருத்து சொல்லவில்லை. அதிமுகவை முற்றாக முழுதுமாக நாங்கள் தவெகவில் இணைப்போம் என்று தவெக தரப்பில் சொல்லப்படுகிறது என்றால், அவர்களிடமே நீங்கள் இது சரியா, ஜனநாயகமா, அரசியல் அறமா என்ற கேள்வியைக் கேட்க வேண்டும். திருமாவளவன்"திமுகவை நாங்கள் 'தீய சக்தி' என்று சொல்வதற்கு காரணம்." - அமைச்சர் நிர்மல் குமார் ஆனால் சம்பந்தமில்லாமல் தவெகவிலும் இல்லாத, அதிமுகவிலும் இல்லாத எங்களைப் போன்றவர்கள் இடத்தில் நீங்கள் எழுப்புகிற கேள்வி பொருத்தமில்லாததாக இருக்கிறது. குதிரை பேரம் போன்ற புகார்கள் குறித்து அந்த இரண்டு கட்சிகளும்தான் பதில் சொல்ல வேண்டும். குதிரை பேரம் நடந்தது உண்மையாக இருந்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநருக்கு அந்த அதிகாரம் இருந்தால் அவர் அதில் உடனடியாகத் தலையிட வேண்டும். குறிப்பாக, இந்தச் சட்டமன்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 'ஒரே தேசம் ஒரே தேர்தல்' என்கிற சட்டத்தைக் கொண்டு வர அவர்கள் முயற்சிக்கப் போவதாகத் தெரிகிறது. ஏற்கனவே அதனை தொகுதி மறுவரையறை மசோதா என்கிற பெயரில் கொண்டு வந்தபோது திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அத்தனை பேரும் ஒற்றுமையாக இருந்து அதனை முறியடித்தோம். இப்போதும் அந்த முயற்சியை நாங்கள் மேற்கொள்வோம். மேற்கு வங்கத்திலே திரிணாமுல் காங்கிரஸிலிருந்து 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றி அரசியல் சூதாட்டம் ஆடுகிற நிலையை நாம் பார்க்கிறோம். நாடாளுமன்றத்திற்குச் சென்றால்தான் இது குறித்த முழு நிலைமை என்ன என்பது தெரியவரும் என்றாலும், நாங்கள் இந்த முறையும் அந்த முயற்சியை முறியடிப்பதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம்". 'தலைமைச் செயலகம் கட்சி அலுவலகமாக மாற்றப்பட்டு வருகிறது' - வானதி சீனிவாசன் காட்டம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/thirumavalavan-reacts-to-aiadmk-leaders-joining-tvk




