சென்னை, உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் (‘டி’ பிரிவு தவிர்த்து) நலன்கருதி 2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்விற்கு (General Counselling) இணைய வழியில் வரும் 15.07.2026 முதல் 24.07.2026 வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, உயர்கல்வித் துறையின் கீழுள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் நலன்கருதி 2026-27ஆம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது. பொது கலந்தாய்வு அதன்படி, உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் கல்லூரிக் கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் 2026-27ஆம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு 15.07.2026 முதல் 24.07.2026 வரை இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் என்ற இணையதள முகவரியில், விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/government-college-non-teaching-employees-can-apply-for-transfer-counseling-minister-viswanathan-announces




