புதுடெல்லி, டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 53-வது கூட்டத்தில் தமிழகத்திற்கு தற்போது தண்ணீர் திறந்துவிட வாய்ப்பே இல்லை என கர்நாடகா மிக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீர் இருப்பு இல்லை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மிக குறைவாக பெய்துள்ளதாக கூறி கர்நாடகா தட்டி கழித்துள்ளது. தங்களது அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை என்றும், பெங்களூரு போன்ற பெருநகரங்களின் குடிநீர் தேவைக்கே தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்துள்ளது. நேரில் பங்கேற்கவில்லை இன்று நடைபெற்ற கூட்டத்தில் கர்நாடக அதிகாரிகள் நேரில் பங்கேற்கவில்லை. மாறாக கர்நாடக அரசு தரப்பில் கூடுதல் செயலாளர் கவுரவ் குப்தா காணொலி வாயிலாக பங்கேற்றார். தமிழ்நாடு தரப்பில் சுப்ரியா சாகு, சுப்ரமணி ஆகியோர் பங்கேற்றனர். தமிழக அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படியும், முந்தைய உத்தரவுகளின்படியும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்குரிய தமிழ்நாட்டின் சட்டபூர்வமான பங்கான காவிரி நீரை உடனடியாகத் திறந்துவிட வேண்டும் எனத் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் வலியுறுத்தினர். ஆணையத்தின் முடிவு இரு மாநிலங்களின் காரசாரமான வாதங்களை அடுத்து, தற்போதைய பருவமழை நிலவரத்தையும் அணை நீர்மட்டத்தையும் ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து கண்காணிக்க போவதாக காவிரி மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/karnataka-says-no-water-for-tamil-nadu




