சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதை ஈரான் விமர்சித்திருக்கிறது. சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோர் பங்கேற்ற உயர்மட்டச் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அதில், வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தில் மூன்று நாடுகளும் கையெழுத்திட்டனர். அதன்படி, மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகள் மீதான தாக்குதலாகக் கருதப்படும். பிராந்திய பாதுகாப்புச் சவால்கள் அதிகரித்து வரும் சூழலில், தற்காப்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் எண்ணெய் வளம் மிக்க சவூதி அரேபியா, அணுஆயுத வல்லமை கொண்ட பாகிஸ்தான், நேட்டோ அமைப்பில் இரண்டாவது பெரிய ராணுவத்தைக் கொண்டுள்ள துருக்கி ஆகிய மூன்று நாடுகளின் இந்த கூட்டமைப்பு உலக அரசியல் அரங்கில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து சவூதி அரசு தரப்பிலிருந்து, ``இது எந்தவொரு ராணுவ அச்சுக்கோப்போ அல்லது மதரீதியான கூட்டமைப்போ அல்ல. இது தங்களது சுயசார்புப் பாதுகாப்புத் திறனை வளர்ப்பதற்கான முயற்சியே தவிர, பிற சர்வதேச மற்றும் வளைகுடா நாடுகளுடனான உறவைப் பாதிக்காது" என்றும் தெரிவித்தது. இந்த ஒப்பந்தம் குறித்து ஜெர்மன் மார்ஷல் ஃபண்ட் அமைப்பின் இயக்குனர் ஓஸ்குர் உன்ஸ்லுஹிசார்சிக்லி, ``இந்த ஒப்பந்தம் முற்றிலும் தற்காப்பு சார்ந்ததே தவிர, எந்தவொரு குறிப்பிட்ட நாட்டிற்கும் எதிரானது அல்ல. பிராந்தியத்தில் நிலவும் உறுதியற்ற தன்மை, உள்நாட்டுப் போர்கள் மற்றும் ஆயுதமேந்திய அமைப்புகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவே இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சவூதி அரேபியாவிற்கு ஈரானாலும், துருக்கிக்கு இஸ்ரேலாலும் பாதுகாப்புச் சவால்கள் இருப்பதும் மறுப்பதற்கில்லை." என்றார். சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் இந்த ஒப்பந்தம் குறித்துத் தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழு உறுப்பினர் இப்ராஹிம் ரேசாய், ``துருக்கி மற்றும் பாகிஸ்தானுடனான காகித அளவிலான ஒப்பந்தங்கள் சவுதி அரேபியாவிற்குப் பாதுகாப்பைத் தராது. அமெரிக்காவிடம் பல ஆண்டுகள் சரணடைந்தும் சவூதிக்குப் பாதுகாப்பு கிடைக்கவில்லை. எனவே பிறரிடம் பாதுகாப்பிற்காகப் பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டு, சவூதி அரேபியா தனது வெளியுறவுக் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சீனா - ஈரான் ரயில்வே. வளைகுடா அரசியலின் புதிய ஆட்டம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/a-defense-agreement-was-signed-between-saudi-arabia-pakistan-and-turkey



