Volledig artikel
2014-ஆம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் நினைவாக, அவர் வசித்த பகுதிக்கு அருகிலுள்ள தாம்பரம்–வேளச்சேரி சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த நடவடிக்கை திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டதா? அல்லது தமிழக வெற்றிக் கழக ஆட்சியிலா? என்ற விவாதம் சமூக வலைதளங்களில் இரு கட்சி ஆதரவாளர்களிடையே தீவிரமடைந்துள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜன் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தபோது கிடைத்த தகவலின்படி, மேஜர் முகுந்த் வரதராஜன் உயிரிழந்ததைத் தொடர்ந்து 2015-ஆம் ஆண்டிலேயே தாம்பரம்–வேளச்சேரி சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அப்பகுதி மக்கள், தாம்பரம் விமானப்படை தள அதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பலரும் அரசிடம் கோரிக்கை வைத்தனர். எனினும், அப்போதைய அதிமுக ஆட்சியில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் கோரிக்கை நிலுவையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின் சுமார் பத்து ஆண்டுகள் கழித்து, 2025-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், ராணுவ உயர் அதிகாரி ஆர்.என். ஸ்ரீனிவாசன், அப்போதைய தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் இதுதொடர்பாகக் கடிதம் அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், நகராட்சி நிர்வாகத் துறை நடவடிக்கை மேற்கொண்டு, கோப்பைத் தாம்பரம் மாநகராட்சிக்கு அனுப்பியது. மேஜர் முகுந்த் வசித்த தெருவுக்கு அவரது பெயரை சூட்டுகிறது தாம்பரம் நகராட்சி! இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சி தேவையான நடைமுறைகளை மேற்கொண்டு, 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், தாம்பரம்–வேளச்சேரி சாலைக்கு "மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை" எனப் பெயரிடும் தீர்மானத்தை நிறைவேற்றியது. பின்னர் அந்தத் தீர்மானம் அரசின் இறுதி ஒப்புதலுக்காகத் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக் காலத்தில் அந்தக் கோப்புக்கு அரசு ஒப்புதல் வழங்கப்படவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு தலைமை செயலகம் இதற்கிடையில், தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கோப்பு இன்னும் நிலுவையில் இருப்பது குறித்து மனிதவளம் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை அமைச்சர் சரத் மூலம் முதலமைச்சர் அலுவலகத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் முதலமைச்சர் விஜய் இறுதி ஒப்புதலை வழங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அதற்கு இறுதி ஒப்புதல் வழங்குவது தமிழ்நாடு அரசின் அதிகாரம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, கிடைத்த அதிகாரப்பூர்வத் தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, பெயரிடும் நிர்வாக நடவடிக்கைகள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டன. அரசின் இறுதி ஒப்புதல் தவெக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நடவடிக்கையில் இரு ஆட்சிகளிலும் வெவ்வேறு கட்டங்களில் பங்களிப்பு இருந்துள்ளது என்பது அதிகாரிகள் தரப்பில் கூறப்படும் விளக்கமாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel — zie link hieronder



