சென்னை, தமிழகம் முழுவதும் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. சென்னை அமைந்தகரை பகுதியில் 8 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மின்தடை தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையான மின்தடை நிலவுகிறது. அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். நீடிக்கும் கோடை வெப்பத்தால் ஏற்படும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இரவில் ஏற்படும் மின்தடையால் காலாண்டு தேர்வுக்கு படிக்கும் மாண வர்கள் சிரமப்படுகின்றனர். மின்விசிறிகள் இயங்காததால் கொசுக்கடியால் முதியோர், குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இரவில் ஏற்படும் மின்தடையால் காலாண்டு தேர்வுக்கு படிக்கும் மாண வர்கள் சிரமப்படுகின்றனர். மின்விசிறிகள் இயங்காததால் கொசுக்கடியால் முதியோர், குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதுதவிர வீடுகளில் இருந்து பணி செய்யும் தகவல் தொழில்நுட்ப பணி யாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் சீரற்ற மின்சாரத்தால் டி.வி., பிரிட்ஜ். பேன், மிக்சி போன்ற பொருட்கள் வெடித்து சிதறும் நிலை உருவாகியுள்ளது. சென் னையில் பரபரப்பான பகுதியான அமைந்தகரை முனிரத்தினம் தெருவில் கடந்த சில நாட்களாக அடிக்கடி அதிக மின்அழுத்த மின்சாரம் இருந்து வந்தது. 8 மணி நேரத்திற்கு மேலாக. இதனால் 'செல்போன் அடாப்டர்', 'வைபை அடாப்டர்'. மிக்சி உள்ளிட்ட பல மின்சாதனங்கள் வெடித்து, கருகி செயலிழந்து போனது. நேற்று காலையில் இருந்தே மின்தடை ஏற்பட்டது. உடனடியாக 2 மின் ஊழியர் கள் வந்து வேலை செய்தனர். ஆனால் பூமிக்கடியில் உள்ள புதைவட கம்பிகள் எரிந்து போனதால் அதனை சரி செய்ய அதிக நேரம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது. 8 மணி நேரம் அவர்கள் பணி செய்தும் அவர்களால் சரி செய்ய முடிய வில்லை. இது போன்ற பணிகளை 2 ஊழியர்களை கொண்டு செய்ய முடியாது. குறைந்தபட்சம் 10 ஊழியர்களை கொண்டு பணி செய்தால் தான் பணிகள் விரைவாக முடியும். இதுபோன்ற நேரங்களில் பொது மக் களின் குறைகளுக்குச் செவிமடுத்து பணிகளை விரைவுபடுத்த மின்வாரிய துறை சார்ந்த அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவதி தொடர்ந்து 8 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாததால் பல் வேறு தரப்பினரும் அவதிக்கு உள்ளாகினர். கடும் வெப்பத்தால் விடு முறை நாளில் வெளியே செல்ல முடியாமல், வீட்டில் குடும்பத்துடன் இருந்தவர்களுக்கு மின்சாரம் சொல்ல முடியாத அவதியை தந்து விட்டது. அவர்கள் புழுக்கத்தால் பெரும் அவதிக்கு உள்ளாகி போனார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/power-cuts-increasing-across-tamil-nadu-chennai-without-electricity-for-8-hours




