சென்னை, சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளர் பூமணி, வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும் கரிசல் வட்டார வாசகர்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது மறைவுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு எழுத்தாளர்களும், திரையுலகினரும், வாசகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தனர். முதல்-அமைச்சர் விஜய் இரங்கல் இந்தநிலையில் மறைந்த எழுத்தாளர் பூமணியின் இறுதி பயணத்துக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். மேலும், பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும். உறவினர், நண்பர்களுக்கும், தமிழ் இலக்கியவாதிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்', என்றும் தெரிவித்தார். இந்தநிலையில், பூமணியின் உடல் இன்று நண்பகல் 12 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிபட்டி கிராமத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.அங்கு அவரது தோட்டத்தில் பிற்பகல் 2 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடந்தது. பூமணி உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் செய்த நிலையில், காவல்துறை அணிவகுப்புடன் 30 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/writer-poomanis-body-laid-to-rest-with-state-honors




