மொபைல் போன் ரீசார்ஜ் பேக்கேஜ்களில் பெரும்பாலான திட்டங்கள் 28 நாள்கள், 84 நாள்கள் என ரவுண்டாக இல்லாமல்தான் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், போன் பேசினால் மட்டும் போதும் என்பவர்கள் கூட, டேட்டா பேக்கேஜையும் சேர்த்துப் போட வேண்டியதாக உள்ளது. இதில் எல்லாம் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது TRAI. இதுவரை பெரும்பாலான மொபைல் ரீசார்ஜ் திட்டங்களில், அழைப்புகள், SMS மற்றும் இணைய டேட்டா ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன. இதனால், இணையத்தைப் பயன்படுத்தாத பயனாளர்களும், தங்களுக்குத் தேவையில்லாத டேட்டாவுக்கான கட்டணத்தையும் சேர்த்துச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. மொபைல் போன் ரீசார்ஜ்ஹார்முஸ் நீர்ச்சந்தியை வைத்து சூதாடும் அமெரிக்கா, ஈரான்; முற்றும் பொருளாதாரப் பிரச்னை? இந்தச் சூழலை மாற்றும் வகையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் Voice மற்றும் SMS சேவைகளுக்கு மட்டும் தனியான ரீசார்ஜ் திட்டங்களை வழங்க வேண்டும் என்று TRAI அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம், ‘எனக்கு அழைப்புகள் மட்டும் போதும்’ என்று நினைக்கும் பயனாளர்கள், தங்களுக்குத் தேவையான சேவையை மட்டும் தேர்வு செய்ய முடியும். 28 நாள்கள் ரீசார்ஜுக்கு மாற்றம் வருமா? மொபைல் பயனாளர்களிடம் நீண்ட காலமாக இருந்த மற்றொரு முக்கியமான புகார் - 28 நாள்களுக்கு மட்டுமேயான ரீசார்ஜ் திட்டங்கள்.ஒரு மாதம் என்று நினைத்து ரீசார்ஜ் செய்தாலும், 28 நாள்களுக்குப் பிறகு மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதனால், ஒரு ஆண்டில் 12 முறை ரீசார்ஜ் செய்வதற்குப் பதிலாக 13 முறை வரை ரீசார்ஜ் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாகப் பலர் தெரிவித்தனர். இந்தக் குறையைக் கருத்தில் கொண்டு, 30 நாள்கள் செல்லுபடியாகும் திட்டங்களையும் வழங்க TRAI அறிவுறுத்தியுள்ளது. யாருக்கெல்லாம் அதிகப் பயன்? பல மூத்த குடிமக்கள், தங்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் பேசுவதற்காக மட்டுமே மொபைல் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு டேட்டா இல்லாத திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். இணையப் பயன்பாடு குறைவாக உள்ள பகுதிகளில், குறைந்த செலவில் தேவையான மொபைல் சேவையைப் பெற இது உதவும். அவசர காலத்திற்காக மட்டும் வைத்திருக்கும் SIM-களுக்குத் தேவையில்லாத சேவைகளுக்காகப் பணம் செலுத்த வேண்டிய நிலை குறையும். தங்களது தேவைக்கு ஏற்ப குறைந்த விலைத் திட்டங்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கும். டிராய்'குட் நியூஸ்' வேலைநிறுத்தம் இல்லை: வங்கிகள் தொடர்ந்து செயல்படும்! 'திடீர்' முடிவுக்கு காரணம் என்ன? தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு என்ன மாற்றம்? TRAI-யின் புதிய விதிமுறைகளைப் பின்பற்றி, ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா (Vi), பிஎஸ்என்எல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் திட்டங்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். புதிய திட்டங்களின் விலை, செல்லுபடியாகும் காலம் மற்றும் சேவைகளின் விவரங்கள் எப்படி இருக்கும் என்பது பயனாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஒரு காலத்தில் மொபைல் போன் என்பது வசதியாக இருந்தது. இன்று அது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. ஆனால், அனைவருக்கும் ஒரே மாதிரியான தேவை இல்லை. ஒருவர் அதிக டேட்டா பயன்படுத்தலாம்; மற்றொருவர் அழைப்புகளுக்காக மட்டும் மொபைல் வைத்திருக்கலாம். எனவே, பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப சேவைகளைத் தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைப்பது முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. TRAI-யின் இந்த நடவடிக்கை, “அனைவருக்கும் ஒரே திட்டம்” என்ற முறையிலிருந்து, “ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கான திட்டம்” என்ற புதிய பாதையை உருவாக்கியுள்ளது. இனி மொபைல் ரீசார்ஜ் என்பது கட்டாயமாக ஒரு தொகுப்பை வாங்குவது அல்ல. தங்களுக்குத் தேவையான சேவையைத் தேர்வு செய்யும் சுதந்திரமாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/technology/trai-pushes-voice-only-plans-and-30-day-mobile-recharges



