சேலம், ஈரோடு- திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஊத்துக்குளி ரெயில் நிலைய யார்டு பகுதியில் ரெயில்வே பாலம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக நாளை (புதன்கிழமை) 3 ரெயில்கள் வழித்தடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தாமதப்படுத்தி இயக்கப்பட உள்ளன. அதன்படி எர்ணாகுளம்- டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் (18190) வழித்தடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் 1 மணி 10 நிமிடங்கள் தாமதப்படுத்தி இயக்கப்படும். ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (13352) வழித்தடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் 50 நிமிடங்கள் தாமதப்படுத்தி இயக்கப்படும். இதேபோல் எர்ணாகுளம்- பெங்களூரு இன் டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (16378) வழித்தடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் 15 நிமிடங்கள் தாமதப்படுத்தி இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-train-services-passing-through-salem




