சென்னை, தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ. 1.73 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தவெக அரசு அமைந்தது முதல் அரசின் பல்வேறு துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அவ்வப்போது அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த சோதனையில் கோடிக்கணக்கில் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - ரூ. 1.73 கோடி பறிமுதல் இந்நிலையில், தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகங்கள் என 36 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.73 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 36 அரசு அலுவலகங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 13 லட்சம் ரொக்கப்பணம், ஜிபே மூலம் பெறப்பட்ட ரூ.1.59 கோடி என மொத்தம் 1 கோடியே 73 லட்சத்து 48 ஆயிரத்து 666 ரூபாய் லஞ்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/anti-corruption-raids-in-tamil-nadu-government-offices-rs-1-73-crore-seized




