சென்னை, 'ஆவேஷம்' படத்தைக் கொடுத்த ஜீத்து மாதவன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்க உள்ள படத்தில் மமிதா பைஜு நடிக்க வைக்க பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறதாம். "பிரேமலு" திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மமிதா பைஜு. அதனைத்தொடர்ந்து, தமிழில் இவர் நடித்த "டியூட்" திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிகளுக்கு பிறகு தொடர்ந்து பல முன்னணி படங்களில் நடிக்க மமிதா பைஜுவிற்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அந்த வகையில் அவரது நடிப்பில் வெளியான ‘ஜனநாயகன்’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, ‘பெத்லேகேம் குடும்ப யூனிட்’ ஆகிய 3 திரைப்படங்களும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளன. இது மமிதா பைஜுவின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. ஒரே ஆண்டில் ஹாட்ரிக் சாதனை ஒரே ஆண்டில் மமிதா பைஜு நடித்த 3 திரைப்படங்கள் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளன. இதனால், ஒரே ஆண்டில் மூன்று ரூ.100 கோடி வசூல் படங்களில் இடம்பெற்ற நடிகை என்ற ஹாட்ரிக் சாதனையை அவர் படைத்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் “MAMITHA BAIJU ERA” என்ற பேச்சும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. துல்கர் சல்மானுக்கு ஜோடியாக இந்த நிலையில், நடிகை மமிதா பைஜு அடுத்ததாக துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, 'ஆவேஷம்' என்ற 'ஹிட்' படத்தைக் கொடுத்த ஜீத்து மாதவன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்க உள்ள படத்தில் மமிதா பைஜு நடிக்க வைக்க பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறதாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜீத்து மாதவன் தற்போது சூர்யா படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/a-string-of-successes-who-is-the-male-lead-in-mamitha-baijus-next-film



