சென்னை, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவ கனவுத் திட்டமான மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயரில் இருக்கும் விடியலை நீக்கி, 'மாற்றம்' செய்துள்ளது தவெக அரசு. ‘மகளிர் விடியல் பயணம்’ அரசு சாதாரண கட்டண நகரப் பஸ்களில் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பொருளாதாரச் சுமையின்றி பயணம் செய்யும் வகையில் இலவசப் பயணத் திட்டம் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான இத்திட்டத்திற்கு ‘மகளிர் விடியல் பயணம்’ என்று பெயரிடப்பட்டு, பஸ்களின் முகப்பு மற்றும் பின்புறக் கண்ணாடிகளில் டிஸ்பிளே போர்டுகளில் அவ்வாறே காட்சிப்படுத்தப்பட்டது. தவெக அரசு பணிக்குச் செல்லும் பெண்கள், சிறு தொழில் புரியும் மகளிர் மற்றும் கல்லூரி மாணவிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திட்டம், புதிய அரசின் கீழும் எவ்வித தடையுமின்றித் தொடர்கிறது. தற்போது தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்களை அதிரடியாக மாற்றம் செய்து வருகிறது. மகளிர் பயணம் அந்த வரிசையில் ‘மகளிர் விடியல் பயணம்’ என்ற திட்டத்தின் பெயரில் ‘விடியல்’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, சுருக்கமாக ‘மகளிர் பயணம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து மண்டலப் பேருந்துகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. நெல்லை, தென்காசி, திருப்பூர், குமரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் செல்லும் நகரப் பேருந்துகள் வரை அனைத்திலும் பழைய ‘மகளிர் விடியல் பயணம்’ பதிவுகள் முழுமையாக அகற்றப்பட்டு வருகின்றன. அதற்குப் பதிலாக, ‘மகளிர் பயணம்’ என்று விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அனைத்துப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர்களுக்கும் தலைமை அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதுக்கோட்டையில் 'விடியல்' நீக்கப்பட்டு மகளிர் பயணம் என்ற பெயருடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நகரப் பேருந்துகளில் 90 சந்தவீத பேருந்துகளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வந்த 366 பேருந்துகளிலும் விடியல் பயண திட்ட பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நான் முதல்வன், முதல்-அமைச்சர் படைப்பகம் பெயர்கள் மாற்றப்பட்ட நிலையில் விடியல் பயண திட்டம் பெயரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2021ல் திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்குதான் தனது முதல் கையெழுத்தை பதிவு செய்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/womens-vidyal-payanam-name-changed




