கோவை, கோவையில் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மூடி மறைப்பதா? இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை கல்லூரி மாணவர் அமுதனின் படுகொலையை குழு மோதல் எனக்கூறி மூடி மறைப்பதா?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஒழுக்கங்களை போதிக்க வேண்டிய கல்விக்கூடங்களில் பகைமை, வெறுப்பு மற்றும் போதைப்பழக்கம் உருவாகி, உயிரைப் பறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார். “போதைப்பொருள் புழக்கம் என்பதை மறைத்து, மாணவர்களின் தகராறு என வழக்கின் கோணத்தை மாற்ற முயற்சிக்கின்றனர். தவெக அரசின் போக்கு அநீதிக்கு துணைபோகும் துரோகம் இல்லையா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். “விஜய் என்ன சொல்லப் போகிறார்?” மேலும், “இறந்துபோன 19 வயது பிள்ளையின் மரணத்துக்கு ‘தாய் மாமனாக’ விஜய் என்ன சொல்லப் போகிறார்?” என தெரிவித்துள்ளார். ரூ.25 லட்சம் நிதி மேலும், பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், மாணவர் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/murder-of-coimbatore-college-student-what-is-vijay-going-to-say-as-a-maternal-uncle-seeman-asks



