சென்னை, 'மாஸ்டர்', 'கைதி', 'விக்ரம்' போன்ற படங்களில் வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான அர்ஜுன் தாஸ், பின்னர் 'அநீதி', 'ரசவாதி', 'போர்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது அவர், நடிகை அதிதி ஷங்கர் ஜோடியாக 'ஒன்ஸ் மோர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். 'குட் நைட்' மற்றும் 'லவ்வர்' போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டே வெளியாக இருந்த இப்படம் சில காரணங்களால் தள்ளிப்போன நிலையில், வரும் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ‘ஒன்ஸ்மோர்’ படக்குழுவினர் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று பேசினர். இந்த நிகழ்ச்சியில் நடிகை அதிதி சங்கர் பேசியதாவது;- “இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. முதன் முதலில் அவரை சந்திக்கும்போது ஒரு ரசிகையாக சந்தித்தேன். இசையமைப்பாளர் அனிரூத் இசை நிகழ்ச்சி ஒன்றில் அர்ஜுன் தாஸை சந்தித்தபோது அவருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே சரி என்றார். இரண்டாவது முறை அவரை ஒரு விருது விழாவில் சந்தித்தேன். எனக்கு அவர்தான் விருது வழங்கினார். தொடர்ந்து மூன்றாவது முறை ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் சக நடிகராக அவரை சந்தித்தேன். அங்கிருந்து இந்த பயணம் மிகவும் அழகாக அமைந்தது. சக நடிகராக ஆரம்பித்து எனது மிகச்சிறந்த நண்பராக அர்ஜுன் தாஸ் மாறிவிட்டார். இந்த படத்திற்காக அர்ஜுன் தாஸ் கடுமையாக உழைத்துள்ளார். இதுவரை ஒரு வில்லனாக பார்த்த அர்ஜுன் தாஸை ‘ஒன்ஸ்மோர்’ படம் மூலம் லவ்வர் பாயாக ரசிப்பீர்கள்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/you-will-admire-arjun-daswhom-youve-seen-as-a-villainas-a-lover-boy-in-the-movie-once-more-aditi-shankar




