தென்காசி, ஆலங்குளம் அருகே காணாமல் போன மூதாட்டியின் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகத்தாய் (வயது 80). இவர் சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது மகன் முத்தையா என்பவர் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை தேடி வந்தனர். மர்ம மரணம் இந்த நிலையில் ஆலங்குளத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேலகலங்கல் காட்டுப் பகுதியில் கருகிய நிலையில் உடல் ஒன்று கிடப்பதாக அப்பகுதி வழியாக சென்ற சிலர் பார்த்து ஊத்துமலை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கருகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், காணவில்லை என ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த சிவலார்குளம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி சண்முகத்தாய் என்பது தெரியவந்தது. மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கடத்தி சென்று கொலை செய்து எரித்தனரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/missing-old-womans-body-found-charred




