பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும், அவர் மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கட்சித் தலைமை மற்றும் நிர்வாக முடிவுகள் தொடர்பாகக் கடந்த சில மாதங்களாகவே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. அதைத் தொடர்ந்து ``கட்சியின் தலைவராகத் தன்னை அறிவிக்க வேண்டும், பா.ம.க-வின் பெயர், கொடி மற்றும் 'மாம்பழம்' சின்னத்தை அன்புமணி பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்" என்று ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்த நிலையில், கட்சிக்குள்ளேயே நீடித்து வந்த தலைமைப் போட்டி தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. சட்டமன்றத் தேர்தலை இரு பிரிவாக எதிர்கொண்ட பா.ம.க-வில் அன்புமணி தரப்பு பா.ம.க-வில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் சென்றனர். அன்புமணி, ராமதாஸ் இந்த சூழலில், ராமதாஸ் திருமண நாளில் அவரின் இல்லத்துக்குச் சென்ற அன்புமணி ராமதாஸுடன் பேசி மீண்டும் இணக்கமான சூழலை உருவாக்கினார். இந்த நிலையில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``இந்த வழக்கை மேற்கொண்டு நடத்த விரும்பவில்லை. எனவே மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை முடித்து வைத்தது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைத் தொடர்ந்து, நீதிமன்ற வழக்கையும் ராமதாஸ் வாபஸ் பெற்றுள்ளதால், அன்புமணி ராமதாஸே பா.ம.க.வின் அதிகாரபூர்வத் தலைவர் என்பது முற்றிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. "ஐந்தாண்டு காலம் சென்னையை நாசமாக்கிவிட்டார்கள்; அதற்கு ஒருவர் தான் காரணம்"- அன்புமணி யாரை சாடினார்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/the-case-filed-by-ramadoss-against-anbumani-was-withdrawn




