சென்னை, தமிழக அரசு சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது: அரசாணை எண் 41 தமிழ்நாடு அரசு சார்பில் மருத்துவ நிறுவனங்கள் ஒழுங்குமுறைச் சட்ட விதிகள் 2018-ஐ எளிமைப்படுத்தும் நோக்கத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் 13.2.2026 அன்று அரசாணை எண் 41 மூலம் வெளியிடப்பட்டது. அதன்படி அடிப்படை பரிசோதனை நிலையங்கள் என்பவை ரத்த சக்கரை அளவு, ஹீமோகுளோபின் போன்ற சாதாரண, எளிமையான பரிசோதனைகளை செய்கின்ற ஒரு லேப் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. புதிய நிபந்தனை அடிப்படை லேப்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களில் லேப் டெக்னீசியன்களால் மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகளின் அறிக்கையில், ஒரு மருத்துவர் அல்லது மருத்துவ நோய்க்குறியியல், அல்லது மருத்துவ நுண்ணுயிரியியல் அல்லது மருத்துவ உயிர் வேதியியலில் முதுநிலை படிப்பு படித்தவர் கையெழுத்திட வேண்டும். அதுவும் படிப்பை முடித்த பிறகு ஓராண்டு அனுபவம் உள்ளவர் தான் கையெழுத்திட வேண்டும் என புதிய நிபந்தனை இந்த அரசாணை மூலம் விதிக்கப்பட்டுள்ளது. சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை ஒழித்துக் கட்டும் உள்நோக்கம் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் ரத்தப் பரிசோதனை நிலையங்களை நடத்திடவும், சோதனை முடிவுகளில் கையெழுத்திட்டு வழங்குவதற்கும் கல்வித் தகுதிகள் ஏற்கனவே வரையறை செய்யப்பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அது நடைமுறையில் உள்ளது. அதன் அடிப்படையில், இதுவரை லேப் டெக்னீசியன்களே, பரிசோதனை முடிவுகளில் கையெழுத்திட்டு வருகின்றனர். அதற்கு மாறாக திடீரென புதிய நிபந்தனைகளை விதிப்பது சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டதாகும். தமிழகத்தில் 80 விழுக்காடு சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்கள் தமிழகத்தில் உள்ள ரத்தப்பரிசோதனை நிலையங்களில் 80 விழுக்காடு பரிசோதனை நிலையங்கள் சிறிய ரத்தப்பரிசோதனை நிலையங்களாகும். இந்த சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்கள் மூலமாகவே தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஏழை - எளிய மக்கள் அவர்களுடைய ரத்த சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின், ரத்த வகைகள் மற்றும் இதர ரத்தப் பரிசோதனைகளை தங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே குறைந்த கட்டணத்தில் எளிதாக செய்து கொள்கின்றனர். அரசாணையை ரத்து செய்ய வேண்டும் இந்த நிலையில் அரசின் புதிய அரசாணை நடைமுறைபடுத்தப்பட்டால், 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறிய ரத்தப்பரிசோதனை நிலையங்ளை மூட வேண்டிய நிலை ஏற்படும். ஏனெனில், அவற்றால் மருத்துவர்களையோ அல்லது மருத்துவ நோய்க்குறியியல் அல்லது மருத்துவ நுண்ணுயிரியியல் அல்லது மருத்துவ உயிர் வேதியியலில் படிப்புகளில் முதுநிலை படிப்பு படித்தவர்வர்களையோ ஊதியம் கொடுத்து வேலைக்கு வைத்துக் கொள்ள முடியாது. இந்த புதிய விதிமுறை, நாடு முழுவதும் சங்கிலித் தொடர்போல் லேப்களை உருவாக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே சாதகமாக அமையும். ஏழை, எளிய மக்களுக்கும், சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களுக்கும் எதிராக அமையும். எனவே, இந்த அரசாணை எண் 41/2026 ஐ தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களையும், அவற்றை நடத்துகின்ற லேப் டெக்னீசியன்கள் மற்றும் அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தையும் காத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-should-protect-small-blood-testing-centers-mveerapandian-insists




