சென்னை, நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் குறித்து இயக்குநர் வெங்கி அட்லூரி பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 விதமான கிளைமாக்ஸ் அதன்படி, படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக மூன்று வெவ்வேறு திரைக்கதை பதிப்புகளை தயாரித்ததாகவும், அவற்றில் தனக்கு பிடித்த கிளைமாக்ஸ் காட்சியை தேர்வு செய்யுமாறு நடிகர் சூர்யாவிடம் கேட்டதாகவும் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார். இந்த தகவல் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. எதிர்பார்ப்பை கூட்டிய கூட்டணி 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், சூர்யாவின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக கருதப்படுகிறது. சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 14-ல் ரிலீஸ் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவும், நவின் நூலி படத்தொகுப்பும் செய்துள்ளனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/suriya-sir-suggested-the-climax-of-vishwanath-sons-venky-atluri




