புதுடெல்லி, மாயமான 15 வயது சிறுவனின் சடலம் நான்கு நாட்களுக்குப் பிறகு சாக்கடையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காத்தாடியைத் துரத்திச் சென்றபோது விபரீதம் டெல்லியின் ஜசோலா பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுவன் மிதுன். அவரது குடும்பத்தினர் அப்பகுதியில் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை காலை மிதுன், வீட்டின் அருகே காத்தாடி விட்டு விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது காத்தாடி அறுந்து சென்ற நிலையில், அதை துரத்தி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மிதுன் சாக்கடையில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. தீவிரமாக நடைபெற்ற தேடுதல் பணி காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்த நிலையில், சிறிது நேரத்தில் மிதுனை காணவில்லை என அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அவர் சாக்கடையில் விழுந்திருக்கலாம் என சந்தேகித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். 4 நாட்களுக்குப் பிறகு மீட்பு நான்கு நாட்களாக தேடுதல் பணி நடைபெற்ரநிலையில், இன்று மிதுன் சாக்கடையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போய் நாட்களுக்கு பிறகு சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/body-of-delhi-teenager-who-fell-in-drain-chasing-kite-found-after-4-days




