குன்னூர், குன்னூரில் மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 2-ம் கட்ட சீசன் நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது 2-ம் கட்ட சீசன் தொடங்கியுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு சமவெளி பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் இவர்கள் குறிப்பாக மலை ரெயிலில் பயணம் மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.குன்னூர் வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ் ராக், டால்பின்நோஸ், லாஸ் நீர்வீழ்ச்சி போன்ற பகுதிகளுக்கு செல்வது வழக்கம். ரெயிலில் பயணிக்க ஆர்வம் இது மட்டுமின்றி ஊட்டி மலை ரெயிலில் பயணிக்கவும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். குன்னூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுத்து நீண்ட நேரமாக காத்திருந்தனர். பின்னர் மலை ரெயில் முன்பு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மலை ரெயிலில் பயணிக்கும் போது இயற்கை காட்சிகள், நீர்வீழ்ச்சிகள், வனவிலங்குகள், குகைகள், பாலங்கள் உள்ளிட்டவைகளை கண்டு ரசித்து சென்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flock-to-ride-the-coonoor-mountain-railway




