தமிழ்நாட்டில் கடந்த மே 10-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. பொறுப்பேற்ற இரண்டரை மாதங்களுக்குப் பிறகு தங்களது முதல் பட்ஜெட்டை சட்டசபையில் இன்று தாக்கல் செய்தது தவெக அரசு. இதன்படி நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கலைத் தொடங்கினார். சுமார் இரண்டரை மணி நேரம் பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் மதியம் 12:31 மணிக்கு முடித்தார். இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஒரு ரூபாயின் வரவு மற்றும் செலவு விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம். ஒரு ரூபாயில் வரவு * பொதுக்கடன் -33.1% * கடன்களின் வசூல் மற்றும் மூலதன வரவு -0.1% * மத்திய அரசிடம் இருந்து பெறும் உதவி மானியங்கள்- 6.3% * மத்திய வரிகளில் பங்கு - 11.9% * மாநிலத்தின் சொந்த வரி வருவாய் -43.3% * மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் - 5.3% செலவு: * மூலதனச் செலவு -10.9% * வட்டி செலுத்துதல் -15.0% * உதவித் தொகைகளும் மானியங்களும் - 33.2% * கடன்களை திருப்பிச் செலுத்துதல் -9.9% * சம்பளங்கள் - 17.3% * ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்கள் - 8.0% * கடன் வழங்குதல் - 1.9% * செயல்பாடுகளும் பராமரிப்புகளும் -3.8% முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/budget-2026-27-do-you-know-the-breakdown-of-income-and-expenditure-for-every-rupee




