Doctor Vikatan: எனக்கு கடந்த சில வருடங்களாக மூக்கில் அரிப்பு, தண்ணீர் வடிவது போன்ற பிரச்னைகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் அலர்ஜி என விட்டுவிட்டேன். பிறகு மருத்துவரைச் சந்தித்துக் கேட்டபோது என் மூக்கில் சதை வளர்ந்திருக்கிறது, தேவைப்பட்டால் ஆபரேஷன் செய்ய வேண்டியிருக்கும் என்கிறார்கள். ஆபரேஷன் செய்யாமல் சொட்டு மருந்து மூலமே இதைக் கரைக்க முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவரும், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான ஆர்.பாலாஜி. காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவரும், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான ஆர்.பாலாஜி மூக்கில் தசை வளர்ச்சி என்று கேள்விப்பட்டாலே பலரும் பயந்துவிடுகிறார்கள். உண்மையில், மூக்கிற்குள் காணப்படும் எல்லாத் திசுக்களும் தசை வளர்ச்சி கிடையாது. இதை ஒரு மருத்துவரால் மட்டுமே சரியாகக் கண்டறிய முடியும். எல்லோரின் மூக்கிலும் இரண்டு பக்கங்களிலும் 'இன்ஃபீரியர் டர்பினேட்' (Inferior turbinate) என்ற இயல்பான தசை அமைப்பு இருக்கும். அதையே நிறைய பேர் தசை வளர்ச்சி என்று தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். இந்த இன்ஃபீரியர் டர்பினேட் தட்பவெப்ப நிலைக்கு (Weather) தகுந்தாற்போல் தன் அளவை மாற்றிக்கொண்டே இருக்கும். குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையில் இது பெரிதாகும். வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகரிக்கும்போது இது சுருங்கிவிடும். மூக்கில் பல்வேறு வகையான பாலிப்கள் (Polyps) ஏற்படுகின்றன. பாலிப் என்பது உடலின் உள் உறுப்புகளில் உள்ள சவ்வுப் படலத்தில் (Mucous membrane) வளரக்கூடிய சிறிய, அசாதாரணமான திசு வளர்ச்சி (Tissue growth) ஆகும். அவற்றுள் முக்கியமான இரண்டு வகைகள் உண்டு. காலையில் எழுந்தவுடனேயே தொடர்ந்து தும்மல் போடுவது, மூக்கில் இருந்து தண்ணீர் போல் கொட்டுவது மற்றும் மூக்கில் அரிப்பு ஏற்படுவது போன்றவை இதன் அறிகுறிகள்.என்ன நோய், எந்த டாக்டர்? 15 - காது, மூக்கு, தொண்டை. மூன்று உறுப்புகள், ஒரே மருத்துவர். ஏன்? முதல் வகை எத்மாய்டு பாலிப்ஸ் (Ethmoid Polyps). இதற்கு முக்கியக் காரணம் அலர்ஜி (Allergy) ஆகும். இது மூக்கின் இரண்டு பக்கங்களிலும் ஏற்படும். காலையில் எழுந்தவுடனேயே தொடர்ந்து தும்மல் போடுவது, மூக்கில் இருந்து தண்ணீர் போல் கொட்டுவது மற்றும் மூக்கில் அரிப்பு ஏற்படுவது போன்றவை இதன் அறிகுறிகள். இந்தப் பிரச்னை உள்ள சிலருக்கு வாசனை அறியும் திறன் முற்றிலும் இல்லாமல் போகலாம் (Loss of smell) அல்லது குறையலாம் (Reduced sense of smell). சிலருக்குப் பெட்ரோல், காஸ் (Gas) மற்றும் சில அமிலங்கள் (Acids) போன்ற மிகவும் வீரியமிக்க வாசனைகளை (Powerful odors) மட்டுமே உணர முடியும். இன்னொரு வகை ஆன்ட்ரோகோயனல் பாலிப் (Antrochoanal Polyp). இது பொதுவாகக் குழந்தைகளுக்கு வரக்கூடியது. சிறு வயதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, பெரிய அளவில் மாறும். இது மூக்கின் ஒரு பக்கத்தில் மட்டுமே ஏற்படும். மூக்கில் பாலிப்ஸ் இருப்பதைக் கண்டறிய இரு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. நேசல் எண்டோஸ்கோபி (Nasal Endoscopy) முறையில் மூக்கிற்குள் சிறிய கேமரா செலுத்திப் பார்க்கப்படும். சிடி ஸ்கேன் (CT Scan) முறையில் பாலிப்ஸின் பரவல் மற்றும் தீவிரத்தைக் துல்லியமாகக் கணிக்கலாம். எந்தவகை பாலிப்பாக இருந்தாலும், அதற்கான முதல்கட்ட சிகிச்சை என்பது அலர்ஜியைக் குணப்படுத்துவதற்கான மருத்துவ மேலாண்மைதான். பாலிப்ஸ் ஆரம்ப நிலையில் இருந்தால், அதற்குக் காரணமான அலர்ஜிக்கு முதலில் சிகிச்சை அளிக்க வேண்டும். ஸ்டீராய்டு ஸ்பிரேக்கள் (Nasal Steroid Sprays) ஆரம்ப நிலை பாலிப்ஸை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வரும். பாலிப்ஸ் மிகவும் தீவிரமாகி, சிலருக்கு மூக்கின் நுனி வரை கூட வளர்ந்துவிடும். இதுபோன்ற தீவிரமான நிலையில் உள்ளவர்களுக்கு வாய் வழியாக உட்கொள்ளும் ஸ்டீராய்டு மாத்திரைகள் தேவைப்படலாம். இதை நீண்ட காலத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது. சில நாள்கள் மட்டுமே கொடுத்துவிட்டு பிறகு நிறுத்திவிட வேண்டும். தீவிரமான நிலையில் உள்ளவர்களுக்கு வாய் வழியாக உட்கொள்ளும் ஸ்டீராய்டு மாத்திரைகள் தேவைப்படலாம்.Doctor Vikatan: அரிப்புக்காக காது குடைந்தபோது செவிப்பறையில் ஓட்டை. கேட்கும் திறன் பாதிக்குமா? மேற்குறிப்பிட்ட எந்த மருத்துவ சிகிச்சையாலும் (மாத்திரைகள்/ஸ்பிரேக்கள்) பாலிப்ஸ் சரியாகாத பட்சத்தில் மற்றும் நோயாளிகளுக்கு வாசனை அறியும் திறன் முற்றிலும் குறையத் தொடங்கினால், அறுவை சிகிச்சை செய்வது தான் சிறந்த வழி. அறுவை சிகிச்சை மூலம் பாலிப்ஸை முழுமையாக அகற்றிவிட்டால், நோயாளிகளுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். அறுவை சிகிச்சை செய்த பிறகும், மருத்துவர் கூறும் அறிவுரைகளை நோயாளிகள் சரியாகப் பின்பற்றவில்லை என்றாலோ அல்லது கவனக்குறைவாக இருந்தாலோ, பாலிப்ஸ் மீண்டும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய முறையான பராமரிப்பு (Proper Post-operative Care) மிக மிக அவசியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் என்ற பெயரில் வெளியாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/health/flesh-growth-in-the-nose-is-it-possible-to-dissolve-it-without-surgery




