காந்தி நகர், குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனாலும், அம்மாநிலத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. அந்த கள்ளச்சாராயத்தை குடித்து பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டம் கார்கடி கிராமத்தில் நேற்று நடந்த விழாவில் 22 பேர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த அனைவருக்கும் வாந்தி, மயக்கம் என உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 4 பேர் பலி இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 18 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/tragedy-in-gujarat-4-dead-after-consuming-illicit-liquor




