புதுடெல்லி எல் நினோவை முன்னிட்டு, நாடு முழுவதும் நீர்நிலைகளை கண்காணிக்க மத்திய மந்திரி அமித்ஷா உத்தரவிட்டு உள்ளார். இந்தியாவில் எல் நினோ தாக்கம் காரணமாக பருவமழை இயல்பைவிட குறையும் என்றும், கடுமையான வெப்ப அலைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் இறுதியில் சூப்பர் எல் நினோ நிலையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. மறுஆய்வு இதனால் இந்தியா, ஆஸ்திரேலியா நாடுகளில் வழக்கமான மழைப்பொழிவு குறைந்து, வறட்சி அல்லது பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உருவாகும். தென் அமெரிக்காவில் அதிகப்படியான மேகங்கள் உருவாகி கடுமையான மழையும், வெள்ளமும் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. ஐரோப்பா நாடுகளிலும் சில இடங்களில் வானிலை மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவில் எல் நினோ தாக்கம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்கான மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயல்புக்கும் குறைவான மழை பொழிவால் ஏற்பட்டு வரும் சூழல் பற்றி மறுஆய்வு செய்தனர். எல் நினோ பாதிப்புகள் விவசாயம், நீர் இருப்பு உள்பட அனைத்து வகையிலும், எல் நினோவால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதற்கான விசயங்கள் பற்றி அப்போது ஆலோசனை நடத்தப்பட்டது. நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் வறட்சி ஏற்பட கூடிய சாத்தியம் பற்றி அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என மந்திரி அமித்ஷா கூறினார். அதனுடன், விவசாயிகளிடம் எந்த வகையான பயிர்களை பயிரிட வேண்டுமென அறிவுறுத்த, வேளாண் அமைச்சகமும் மற்றும் அனைத்து தொடர்புடைய அமைச்சகங்களும், மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதுடன், தொடர்ந்து கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார். நாடு முழுவதும் உள்ள நீர் தேக்கங்களை கண்காணிக்கும்படி நீர்வள துறை அதிகாரிகளையும் அறிவுறுத்தி உள்ளார். நீர்நிலைகள், நீர்மட்ட அளவை கண்காணிக்கும்படி அறிவுறுத்தியதுடன், போதிய மின் விநியோகத்திற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி மத்திய மின்துறை அமைச்சகத்தின் செயலாளருக்கும் அவர் உத்தரவிட்டு உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/el-nino-impact-union-minister-amit-shah-orders-to-monitor-water-bodies-across-the-country




