சென்னை, தென் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. சென்னையில் கனமழை இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. சென்னையின் மாநகர், புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, கிண்டி, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், மாம்பலம், கோயம்பேடு, கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், ஆவடி, திருவேற்காடு, வேலப்பன்சாவடி, பூந்தமல்லி, மாங்காடு, செம்பரம்பாக்கம், தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாசாலை உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/weather/heavy-rain-in-various-parts-of-chennai




