ஆணாதிக்க வன்முறை பற்றிய ஒரு உணர்வுப்பூர்வமான கதை, ஒடுக்குமுறை, சாதி மற்றும் அடையாளம் குறித்த உருக்கமான படம் – ‘டோரதி’. பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பர்களாக பழகி வரும் சனந்த் மற்றும் ரிஷிகாந்த், அடி தடி செய்து கொண்டு தைரியமான இளைஞர்களாக வலம் வருகிறார்கள். மதுரை மண்ணுக்கே உரிய தெனாவட்டுடன் நடமாடுகிறார்கள். இதற்கு இடையில் எதிர்பாராத ஒரு சம்பவத்தால் இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதனால் மதுரையை விட்டு சென்று வட இந்தியாவில் வாழ்ந்து வருகிறார் ரிஷிகாந்த். இந்த சூழலில் சனந்த்தை கொலை செய்ய வேண்டும் என்று அவரது தந்தையே ரிஷிகாந்திடம் வேண்டுகோள் விடுக்க மிகப்பெரிய திருப்பம் உண்டாகிறது. எதிர்பாராத இந்த சூழ்நிலையை ரிஷிகாந்த் எப்படி எதிர்கொண்டார்?, சனந்தை அவரது குடும்பத்தாரே ரிஷிகாந்த் மூலம் கொலை செய்ய முடிவு செய்தது ஏன்? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘டோரதி’ திரைப்படத்தின் மீதி கதை. கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் இருவரும் வெளுத்து வாங்கி இருக்கிறார்கள் அழுத்தமான எதார்த்தமான நடிப்பால் கலங்கடித்து இருக்கிறார்கள் உணர்வுபூர்வமான காட்சிகளில் சனந்தும் உணர்ச்சிபூர்வமான காட்சிகளில் ரிஷிகாந்தும் ஸ்கோர் செய்கிறார்கள். ரிஷிகாந்த் நிச்சயம் பெரிய ஆளாக வருவார். குறைவான காட்சிகளை வந்தாலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார் கீர்த்தி சுரேஷ். அவரது முடிவு கலங்கடிக்கிறது. ராமச்சந்திரன் துரைராஜ், சவுந்தராஜன், முத்துக்குமார் நடிப்பில் கலக்கி விட்டார்கள். ஜீவா சுப்பிரமணியன், கஜராஜ், ராம்ஸ் உள்ளிட்டோரம் மனதில் தங்குகிறார்கள். திரு ஒளிப்பதிவில் 80 - 90 காலகட்டத்தில் பயணித்தது போன்று உணர்வு ஏற்படுகிறது. இளையராஜாவின் இசை படத்தின் உயிர்நாடியாக அமைந்துவிட்டது. கல்யாண விருந்து., முத்துமணி. போன்ற இரு பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது. எதார்த்தமான நேர்த்தியான திரைக்கதை படத்துக்கு பலம். கதையின் கருவை அனைவரும் ஏற்பார்களா என்பது சந்தேகம். கொஞ்சம் தடுமாறினாலும் சர்ச்சைக்கு உள்ளாகி விடும் இந்த கதையை, மிகவும் நேர்த்தியாக உலக தர படைப்பாக இயக்கி மீண்டும் தனது முத்திரையை ஆழமாக பதித்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். கிளைமாக்ஸ் காட்சி இதுவரை எந்த படத்திலும் இல்லாத முடிவு. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/movie-review/dorothy-cinema-review




