திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் பவுர்ணமி மற்றும் விழா நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. அதில் கார்த்திக்கை தீபத் திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா போன்றவை முக்கியமான விழாக்களாகும். அவ்வகையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் கோவிலில் விநாயகர் உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. கொடியேற்றம் அதனைத்தொடர்ந்து உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தின் முன்பு பராசக்தி அம்மன் பக்தர்கள் மத்தியில் எழுந்தருளினார். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கல வாத்தியங்கள் முழங்க சுமார் 6.30 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் காலையும், மாலையும் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் மாடவீதி உலா நடைபெறுகிறது. அதன்படி நேற்று விநாயகர், பராசக்தி அம்மன் வீதிஉலா நடை பெற்றது. வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை விழா நடக்கிறது. 14-ந் தேதி காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலையில் வளைகாப்பு உற்சவமும், பின்னர் பராசக்தி அம்மன் வீதிஉலாவும் நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று இரவு 12 மணிக்கு மேல் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பரணிதரன் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், விழா குழுவினர் செய்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/devotional/aadi-pooram-brahmotsavam-festival-begins-in-tiruvannamalai




