ஆம்ஸ்டெல்வின், பெண்கள் உலகக் கோப்பை ஆக்கியில் இந்தியா- சீனா மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' னது. தொடக்க ஆட்டம் 16-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி பெல்ஜியம் (வாவ்ரே) மற்றும் நெதர்லாந்தில் (ஆம்ஸ்டெல்வின்) நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற அணியான சீனாவை நேற்று எதிர்கொண்டது. டிரா தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய இந்திய அணி முதல் பாதியில் 2 கோல் போட்டது. நவ்னீத் கவுர் (8-வது நிமிடம்), தீபிகா (25-வது நிமிடம்) கோலடித்து அசத்தினர். அதேபோல் சீனா 14 நிமிடத்தில் பெனால்டி ஸ்டிரோக்கிலும், 39-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தியும் கோல் அடித்து சமன் செய்தது. முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. அடுத்த ஆட்டம் இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் நாளை மோதுகிறது. முன்னதாக தென்ஆப்பிரிக்கா தனது தொடக்க ஆட்டத்தில் 0-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் பணிந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/hockey/indian-women-hold-china-to-2-2-draw-in-their-fih-hockey-world-cup-2026-opener




