காலே, இலங்கைக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்தியா - இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் காலேயில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி பயிற்சி ஆட்டத்தில் இலங்கை லெவன் அணியை தோற்கடித்த உற்சாகத்தோடு இந்திய வீரர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். தற்போது நடந்து வரும் 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியா 87.50 சதவீத புள்ளியுடன் முதலிடத்திலும், நடப்பு சாம்பியன் தென்ஆப்பிரிக்கா 75 சத வீத புள்ளியுடன் 2-வது இடத்திலும் உள்ளன. இந்தியா எப்படி? இந்திய அணி 9 டெஸ்டுகளில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிரா என 48.15 சதவீத புள்ளிகள் எடுத்து 5-வது இடம் வகிக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உள்ளி ளுரில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 0-என்ற கணக்கில் இழந்தது இந்தியாவுக்கு பெருத்த பின்னடைவாக அமைந்தது. இது இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பையும் கேள்விக்குறியாக்கியது. 9 டெஸ்ட் போட்டிகள் இந்திய அணிக்கு இன்னும் 9 டெஸ்ட் போட்டிகள் எஞ்சியுள்ளன. அதாவது இலங்கை (2 டெஸ்ட்), நியூசிலாந்து (2), ஆஸ்திரேலியா (5) ஆகிய அணிக ளுடன் மோத வேண்டி இருக்கிறது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மட்டும் சொந்த மண்ணில் நடக்கிறது. இந்த 9 டெஸ்டுகளில் இந்திய அணி 7-ல் வெற்றி, 2-ல் தோல்வி கண்டால் 62.96 சதவீத புள்ளிகள் பெறும். 8-ல் வெற்றி. ஒரு தோல்வி அடைந்தால் 68.52 சதவீத புள்ளிகளை எட்டும். கடந்த முறை தென்ஆப்பிரிக்கா 67.54 சதவீத புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது நினைவு கூரத்தக்கது. 9 டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றால் எந்தவித சிக்கலும் இன்றி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதிக்கலாம். அதே நேரத்தில் மெதுவான பந்துவீச்சு புகாரில் சிக்கி புள்ளிகளை இழக்காமல் பார்த்துக் கொள்வது முக்கியம். இலங்கைக்கு எதிரான சவால் முதலில் இந்திய அணி இலங்கைக்கு எதிரான சவாலை வெற்றிகரமாக கடக்க வேண்டும். தற்போது இலங்கைக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2 போட்டி கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் காலேயில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இலங்கை மண்ணில் இந்திய அணி இலங்கை மண்ணில் 2008-ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் தொடரை இழந்ததில்லை. 2015-ம் ஆண்டில் அங்கு சென்ற போது 2-1 என்ற கணக்கிலும், 2017-ம் ஆண்டில் 3-0 என்ற கணக்கிலும் தொடரை கைப்பற்றியது. ஆனால் இப்போது இந்திய அணியில் அனு பவ வீரர்கள் மிகவும் குறைவு. இருப்பினும் இலங்கை தொடரை முழுமையாக வசப்படுத்தினால் மட்டுமே இந்திய அணியால் இறுதிப்போட்டியை பற்றி நினைத்து பார்க்க முடியும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/will-india-qualify-for-the-world-test-championship-final




