சென்னை, நடிகர் சூர்யாவின் 50-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று பேசப்படுகிறது. இந்த புதிய படம் லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களின் இணைப்பாக (எல்.சி.யூ.) இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து ஹிட் கொடுத்த சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவுக்கு இந்த ஆண்டு ராசியான ஆண்டாகவே இருக்கிறது. தொடர்ச்சியாக படங்கள் விமர்சிக்கப் பட்ட நிலையில் 'கருப்பு'. 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்று அடுத்தடுத்து 2 வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார் சூர்யா. தற்போது ஜித்து மாதவன் இயக்கும் 'சூர்யா 47' படத்தில் நடித்து வரும் அவர், தொடர்ந்து த.செ.ஞானவேல் இயக்கும் 'சூர்யா 48' படத்திலும் நடித்து வருகிறார். மேலும், இயக்குநர் எச்.வினோத் இயக்கத்திலும் சூர்யா நடிக்க உள்ளார். இப்படம் தற்காலிகமாக 'சூர்யா 49' என அழைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவின் 50-வது படம் இதற்கிடையில் சூர்யாவின் 50-வது படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி சூர்யாவின் 50-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று பேசப்படுகிறது. 'விக்ரம்' படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா மிரட்டியிருந்தார். இந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்த புதிய படம் தயாராகலாம் என்றும், இதுவும் லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களின் இணைப்பாக (எல்.சி.யூ.) இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. படத்துக்கு பெயர் 'ரோலக்ஸ்' தானா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/is-lokesh-kanagaraj-directing-suriyas-50th-film



