சென்னை, காதலிக்குமாறு வற்புறுத்தியதால் கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த பூந்தமல்லியை சேர்ந்தவர் ரோகித் (19 வயது). கல்லூரி மாணவரான இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ரோகித்தின் நடத்தை சரியில்லாததால் கடந்த சில மாதங்களாக அந்த மாணவி, ரோகித்துடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரோகித், தனது அண்ணன் விக்னேஷ் (20 வயது) என்பவருடன் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று மீண்டும் தன்னை காதலிக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் மனமுடைந்த மாணவி, திடீரென வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயம் அடைந்த மாணவியை, குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் ரோகித் மற்றும் அவரது அண்ணன் விக்னேஷ் ஆகிய இருவரையும் போக்சோ சட்டம் மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-attempts-suicide-after-pressure-to-love-brothers-arrested




