'சட்டமன்றம் இன்று.' கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகப்புத் துறையின் மானியக் கோரிக்கையை அமைச்சர் வெங்கட்ரமணன் இன்று அவையில் தாக்கல் செய்கிறார். 'எந்த மாணவரும் பாதிக்கப்படக்கூடாது.' கடந்த ஆட்சியை விட மூன்று மடங்கு அதிகமான மாணவர்களை இந்த ஆண்டு அம்பேத்கர் அயலக உயர்க்கல்வித் திட்டத்தின் கீழ் கொண்டு வந்திருக்கிறோம். அதற்கு 84 கோடிக்கும் மேல் செலவளிக்க முடியாது எனும் சூழல் எழுந்த போது, முதல்வரிடமும் நிதித்துறை அமைச்சரிடமும் பேசினோம். 'எந்த மாணவரின் கல்வியும் பாதிக்கப்படக்கூடாது.' எனக் கூறி முதல்வர் கூடுதல் நிதியை ஒதுக்கிக் கொடுத்தார். - வன்னிஅரசு - வன்னியரசு 'அம்பேத்கர் அயலக உயர்க்கல்வி திட்டம்.' அம்பேத்கர் அயலக உயர்க்கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு முறையாக உதவித்தொகை வழங்கப்படுகிறதா? - கோ.வி.செழியன் அமைச்சர் வன்னியரசு - மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் பாரதிதாசன் என்ற மாணவருக்கு அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் உதவித்தொகை செல்லவில்லை என்பது தவறான உள்நோக்கத்துடன் பரப்பப்படும் செய்தி. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மலேசியாவில் முனைவர் படிப்பு படிக்க மூன்றாண்டுகளுக்கு உதவித்தொகை அளிக்க கடந்த ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கல்விக்கட்டணம், ஆராய்ச்சி, வாழ்வின செலவினங்களுக்காக அதிகபட்சம் ஆண்டுக்கு 36 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது. பாரதிதாசன் என்ற அந்த மாணவரின் கல்லூரி கட்டணம் 5 லட்சம் ரூபாய். அந்த 5 லட்சம் போக மீதமுள்ள 31 லட்ச ரூபாய் ஆராய்ச்சி மற்றும் வாழ்வின செலவுக்காக கோரியிருந்தார். அரசும் வழங்கியது. ஆனால், அதற்கான உரிய செலவினங்களுக்கான ஆவணத்தை சமர்பிக்க கேட்டோம். அந்த மாணவர் 10 மாதங்களாகியும் இன்னமும் ஆவணங்களை சமர்பிக்கவில்லை. இந்நிலையில், அவர் இரண்டாமாண்டிற்கான 31 லட்ச ரூபாயை கேட்டுக் கொண்டிருக்கிறார். மாணவரின் கல்வி நலனை கருத்தில் கொண்டு அவரின் இரண்டாமாண்டு கல்விக் கட்டணம் 5.5 லட்சம் மற்றும் வாழ்வின செலவுக்காக 6.5 லட்ச ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது வரை அவருக்கு மொத்தமாக 48,22,097 ரூபாய் அந்த மாணவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது வரை அவர் அதற்கான ஆவணங்களை சமர்பிக்கவில்லை. மேலும், ஆவணத்தை சமர்பிக்காமல் கூடுதல் தொகையை விடுவிக்கக் கோரி ஊடகங்களில் தவறான தகவலை பேசி வருகிறார். அதை அரசியல் உள்நோக்கத்தோடு எடுத்து விமர்சிக்கின்றனர். 'இடதுசாரி மாணவர்கள் குறித்த அறிக்கையும் சர்ச்சையும்!' உயர்கல்வித்துறை இயக்குனர் அவர்கள் உரிமைக்காக போராடும் இடதுசாரி மாணவர்களின் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து நடவடிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைக்கக் கோரி சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு வட்டாட்சியர் இடதுசாரிகளின் புள்ளிவிவரத்தை கேட்டிருக்கிறார். சுதந்திர நாட்டில் அரசியலமைப்புக்கு எதிராக இப்படி நடக்கிறதே? - மாரிமுத்து, எம்.எல்.ஏ அமைச்சர் செங்கோட்டையன் - குஜிலம்பாடி வட்டாட்சியரை சர்வே செய்வதற்காகவே அனுப்பினோம். அவர் தேவையில்லாமல் இந்த புள்ளிவிவரங்களை கேட்டிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் - மாநில அளவில் சில நேர்வுகளில் போராட்டங்களின் போது ஒழுங்கு அமைதியை பராமரிக்க வேண்டியது குறித்த கடிதம் 17.08.2026 அன்று உயர்கல்வித்துறை மூலம் கல்லூரி கல்வி இயக்கங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளும் ஒழுங்கு அமைதி குறித்து 20.08.26 க்குள் அறிக்கை அளிக்கும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து அனைத்து அரசுக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் சில அமைப்புகள் பற்றியும் கட்சிகள் பற்றியும் தவறான வாசகங்கள் இடம்பெற்றது. அதை உடனடியாக கவனித்து திரும்பப் பெற்றோம். இதில் உள்நோக்கம் இல்லை. மாணவர்களின் நியாயமான உரிமைகளை இந்த அரசு மதிக்கும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/tn-assembly-demand-for-grants-for-food-and-consumer-protection-department




