வாஷிங்டன், தாய்நாடு அல்லது வேறு நாடுகளுக்கு விடுமு றையில் சென்றுள்ள அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் செப்டம்பர் 15க்குள் திரும்பாவிட்டால் பழைய விசா சலுளை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. விசா விதிகளில் மாற்றம் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிகளில் பல மாற்றங்களை அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ளது. தற்போது அமலில் உள்ள நடைமுறையின்படி, எப் 1 விசா எனப்படும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா வைத்திருப்போர், 'டியூரேஷன் ஆப் ஸ்டேட்டஸ்' என்ற சலுகையின் கீழ், அவர்களின் படிப்பு முடியும் வரை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் அமெரிக்காவில் தங்கியிருக்க முடியும். வரும், செப்., 15க்கு பின் அமெரிக்காவிற்கு வரும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 4 ஆண்டுகள் மட்டுமே எப் 1 விசா அனுமதி வழங்கப்படும். மேலும், படிப்பு முடிந்த பின் தாய்நாடு திரும்புவதற்காக வழங்கப்பட்டு வந்த 60 நாட்கள் அவகாசம், 30 நாட்களாக குறைக்கப்படுகிறது. அதற்கு மேல் தங்க வேண்டியிருந்தால், தனியாக அனுமதி நீட்டிப்பு கோரி விண்ணப்பிக்க வேண்டும். எனவே விடுமுறையில் இந்தியா வந்துள்ள மாணவர்கள், செப்., 15க்கு முன்பாகவே அமெரிக்காவிற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/அமெரிக்க-விசா-மாணவர்களுக்கான-சலுகை-பறிபோகும்-ஆபத்து-காரணம்-என்ன




