சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தன்னலமின்றி போராடிய முன்னோடி, இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கல்வி, சமூக விழிப்புணர்வு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகிய துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பு, தலைமுறைகள் கடந்தும் சமத்துவப் போராட்டத்திற்கு வழிகாட்டியாக விளங்குகிறது. மரியாதை அவரது தொலைநோக்கு சிந்தனை, உறுதியான சமூகப் பணி மற்றும் மனித சமத்துவத்தின் மீதான அர்ப்பணிப்பு இன்று வரை நமக்கு ஊக்கமளிக்கிறது. அவர் கனவு கண்ட சமத்துவமும் மனிதநேயமும் நிறைந்த சமூகத்தை உருவாக்குவது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை ஆகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/dwettamalai-srinivasans-birthday-nainar-nagendran-pays-tribute




