சென்னை, இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.3,273 கோடியாக உயர்ந்துள்ளது என்று அதன் நிர்வாக இயக்குனர் பினோத் குமார் தெரிவித்துள்ளார். 2026-27-ம் நிதி ஆண்டின் இந்தியன் வங்கியின் முதலாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை அதன் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான பினோத் குமார் நிருபர்கள் முன்னிலையில் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- நிகர லாபம் இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த நிதி ஆண்டில் (ஜூன்) ரூ.2,973 கோடியாக இருந்தது. தற்போது நிகர லாபம் ரூ.3,273 கோடியாக உயர்ந்து இருக்கிறது. கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பீடுகையில் 10.09 சதவீதம் அதிகரித்து உள்ளது. வங்கியின் செயல்திறன். நிலையான வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.4,770 கோடியில் இருந்து ரூ.5.557 கோடியாகவும் நிகர வட்டி வருவாய் ரூ.6,359 கோடியில் இருந்து ரூ.7,435 கோடியாகவும் உயர்ந்துள்ளது. வங்கியின் பரவலான முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் மொத்த வணிகம் 13.66 சதவீதம் அதிகரித்துள்ளது. விருது மொத்த வைப்புத்தொகை (டெபாசிட்) ரூ.7 லட்சத்து 44 ஆயிரத்து 289 கோடியில் இருந்து ரூ.8 லட்சத்து 44 ஆயிரத்து 578 கோடி என்ற அளவை எட்டி இருக்கிறது. மொத்தம் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 720 கோடி வரை முன்னுரிமை கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக ஐ.ஐ.பி.எப். அமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-banks-net-profit-rises-to-rs-3273-crore-managing-director-binod-kumar




