"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இமானுவேல் சேகரன் நினைவிடம் விடுதலைப் போராட்ட வீரரும் சமூக நீதிப் போராளியுமான தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாளையொட்டி, குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் அவரது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்திப் பேசியவர், "தியாகி இமானுவேல் சேகரன் மகத்தான மாமனிதர். சாதிகளால் ஒருவரை ஒருவர் உயர்ந்தவராகவும் தாழ்ந்தவராகவும் கருதி வாழக்கூடாது என்கிற சமநீதியை நிலைநாட்டுவதற்காகத் தன் உயிரைத் தந்தவர். அவரைப் போன்ற மகத்தான தேசியவாதிகள் பிறந்ததால்தான், இன்றைக்கும் தமிழ் மண்ணிலே தேசியம் நிலைத்து நிற்கிறது. அவரைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை. குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் விடுதலைப் போராட்டத்தில் இளம் வயதிலேயே பங்கேற்ற அவர், விடுதலைக்குப் பின்னரும் சமத்துவத்தையும் சமூக நீதியையும் நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபட்டார். சமூகப் பாகுபாடுகளுக்கு எதிராகத் துணிச்சலுடன் குரல் எழுப்பியவர், மக்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். சமத்துவம், சமூக நீதி மற்றும் நல்லிணக்கம் நிறைந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது இலட்சியங்கள் என்றும் நினைவுகூரத்தக்கவை. தியாகி இமானுவேல் சேகரனின் வாழ்க்கையும் தியாகமும் நமது சமூகத்தில் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்த தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கட்டும்" என்று அவர் புகழஞ்சலி செலுத்தினார். இமானுவேல் சேகரன் 100: ஒரு கொலையும் அதில் பின்னிப் பிணைந்துள்ள அரசியலும்! | Long Read முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/vice-president-of-india-honour-to-immanuel-sekaran-memorial




