கான்சாஸ் சிட்டி, 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடு கள் இணைந்து நடத்தி வருகிறது. உலகமே ஆவலுடன் உற்று நோக்கும் இந்த போட்டி தொடர் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. காலிறுதியில் இருந்து போட்டிகள் அமெரிக்காவில் அரங்கேறுகின்றன. இதில் இந்திய நேரப்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு கான்சாஸ் சிட்டியில் நடைபெறும் கடைசி காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, சுவிட்சர்லாந்து அணியை சந்திக்கிறது. பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி லீக் ஆட்டங்களில் அல்ஜீரியா (3-0), ஆஸ்திரியா (3-0), ஜோர்டானை (3-1) பந்தாடியது. 2-வது சுற்றில் (ரவுண்ட் 32) கேப்வெர்டேவிடம் கூடுதல் நேரத்தில் போராடி (3-2) வென்றது. 3-வது சுற்றில் (ரவுண்ட் 16) எகிப்துக்கு எதிராக தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டெழுந்து (3-2) வெற்றி கண்டது. 79-வது நிமிடம் வரை 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த அர்ஜென்டினா பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வந்து கடைசி 11 நிமிடங்களில் அடுத்தடுத்து 3 கோல் போட்டு அசத்தி காலிறுதிக்குள் கால்பதித்தது. அந்த அணி தனது வீறுநடையை தொடரும் முனைப்புடன் உள்ளது. அர்ஜென்டினா அணியில் 39 வயதான கேப்டன் லயோனல் மெஸ்சி எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஜொலித்து வருகிறார். எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் அவர் இதுவரை 8 கோல்கள் அடித்து எம்பாப்வேயுடன் இணைந்து முதலிடத்தில் இருக்கிறார். இந்த அணியின் சவாலை சமாளிப்பது சுவிட்சர்லாந்துக்கு எளிதான காரியமாக இருக்காது. உலகக் கோப்பையில் 2 முறை சந்தித்ததும் இதில் அடங்கும். முன்னதாக மியாமி நகரில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 2.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி,நார்வேயுடன் மல்லுகட்டுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/football/football-world-cup-argentina-to-face-switzerland-in-the-quarter-finals-tomorrow




