தி.மு.க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ``எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் வழிநடத்தப்பட்ட அதிமுகவை யாராலும், குறிப்பாக தவெக-வால் அழித்துவிட முடியாது. அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஓடலாம். ஆனால் உண்மையான தொண்டர்கள் இயக்கத்திலேயேதான் இருப்பார்கள். எவரை ஒழித்தால் சரியாக இருக்கும் என்பது தொண்டர்களுக்குத் தெரியும். எனவே, அந்த அ.தி.மு.க தொண்டர்கள் விரைவில் தி.மு.க-வுடன் கைகோர்ப்பார்கள். இன்னும் ஆறு மாத காலத்தில் தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க-வின் ஆட்சி மலரும். அனிதா ராதாகிருஷ்ணன் எந்த ஒரு சக்தியாலும், எந்தக் கொம்பனாலும் தி.மு.க-வைத் தொட்டுப் பார்க்கவோ அல்லது அசைத்துப் பார்க்கவோ முடியாது என்பதுதான் வரலாறு. அதைத் தற்போதும் நிரூபித்துக் காட்டுவோம். தற்போதைய சூழலில் த.வெ.க எம்.எல்.ஏ அனைவரும் எப்போது அக்கட்சியை விட்டு வெளியேறலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தி.மு.க-வைக் காட்டி அவர்களைப் பயமுறுத்தி வருகிறது. இரண்டே மாதத்தில் இந்தக் கட்சி விளங்காது என அவர்களே வருவார்கள். நாங்கள் யாரையும் கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை, அவர்களாகவே தானாக முன்வந்து தி.மு.க-வில் இணையப் போகிறார்கள்" என்றார். திமுகவில் இணைய ரூ.50 கோடி பேரமா? தவெக எம்எல்ஏ குற்றச்சாட்டுக்கு அனிதா ராதாகிருஷ்ணனின் விளக்கம் என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/anita-radhakrishnan-has-stated-change-of-government-will-take-place-in-six-months




