சமீபத்தில் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த டிரோன் தாக்குதலில் அந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. சுத்திகரிப்பு நிலையங்களின் பாதிப்பு குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28, 2026) ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக்கொண்டிருந்தார். இதனால், ரஷ்யாவின் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, பெட்ரோல் விலை அதிகரிப்பு, பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசை, ரேஷன் அடிப்படையில் பெட்ரோல் விநியோகம் என்று ரஷ்ய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல்'பங்குச்சந்தை ஏற்றத்தில் இருக்கிறது; அதனால், எனக்கு லாபம்" - தனது வருமான உயர்வு குறித்து ட்ரம்ப் பொதுவாகவே, வெயில் காலங்களில், ரஷ்யாவிற்கு அதிக பெட்ரோல் தேவைப்படும். இப்போது ரஷ்யாவில் வெயில் காலம். இதுவும் ரஷ்ய அரசு மற்றும் மக்களுக்கு சவாலை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சூழலை சமாளிக்க பிற நாடுகளிடம் பேசி வருவதாகவும், ஏற்றுகொள்ளக் கூடிய விலையில் பிற நாடுகளிடம் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்ய ஆலோசனை செய்து வருவதாகவும் ரஷ்ய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 30, 2026) கூறியிருந்தது. இதையொட்டி, இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு பெட்ரோல் கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்கிற தகவலை NDTV பகிர்ந்துள்ளது. ஆனால், இது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வத் தகவலும் இதுவரை இல்லை பெரும்பாலும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தான் எண்ணெய் இறக்குமதி செய்யும். இப்போது நிலைமை மாறி, ரஷ்யா இந்தியாவில் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்து வருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே மோதல்: 'Open War' ஆக மாறுமா? என்ன பிரச்னை? |Full Summary முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/russia-imports-petrol-from-india-after-ukraine-drone-strikes




