நெல்லை, திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கண்ணநல்லூர் பகுதியில் தண்ணீர் வரவில்லை என்று குற்றம்சாட்டி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜனிடம் புகார் தெரிவித்துள்ளனர். அப்போது அங்கு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது. இதற்கிடையில், வாக்குவாதம் முற்றியபோது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் மீது கல்லை எறிந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மகாராஜன் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-nellai-panchayat-president-stoned-to-death-police-investigation-underway




