வாஷிங்டன், 4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்று வரும் 18வது லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. 173 ரன்கள் குவிப்பு கலிபோர்னியாவில் நடைபெற்றுவரும் இந்த டாஸ் வென்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய அந்த அணியின் தொடக்க வீரர் சாய்தேஜா 55 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். நைட் ரைடர்ஸ் தரப்பில் அந்த அணியின் சுனில் நரைன், ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் நைட் ரைடர்ஸ் களமிறங்கி விளையாடி வருகின்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/los-angeles-knight-riders-vs-texas-super-kings-1st-innings-in-major-league-cricket




