விந்தோக், நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 348 ரன்கள் குவித்துள்ளது. நமீபியா - தென் ஆப்பிரிக்கா தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி விந்தோக் நகரில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. 349 ரன்கள் இலக்கு இதில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜோர்டன் ஹெர்மன் அதிகபட்சமாக 126 பந்துகளில் 150 ரன்கள் குவித்தார். மழை இதையடுத்து 349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நமீபியா களமிறங்கியது. நமீபியா 21.3 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, நமீபியா வெற்றிபெற 28.3 ஓவர்களில் 273 ரன்கள் தேவை. அதேபோல், தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற 7 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/namibia-south-africa-match-affected-by-rain




