சென்னை, தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதியன்று வங்கிக் கணக்குகளில் பெற்று வரு கின்றனர். ஆனால் இந்த மாத இறுதியில் வங்கி ஊழியர்கள் 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதோடு காந்தி ஜெயந்தி உள்ளிட்ட விடுமுறை நாட்களும் தொடர்ந்து வருகிறது. இதனால் அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதை உணர்ந்து அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை இன்றே (25-ந் தேதி) வழங்க வேண்டும் என்று அனைத்துத் துறை தலைவர்களுக்கும் அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- வரும் 28, 29 மற்றும் 30-ந் தேதிகளில் 3 நாட்கள் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்களில் வங்கிப் பரிவர்த்தனைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று மத்திய அரசின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசின் இந்த செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம், ஓய்வூதியம் (பாதுகாப்பு துறை, அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உள்பட) ஆகியவற்றை 25-ந்தேதி (இன்று) வழங்குவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான செப்டம்பர் மாத ஓய்வூதியமும் 25-ந் தேதியிலேயே வழங்கப்படும். இம்மாதம் 28 முதல் 30-ந்தேதி வரை உத்தேசிக்கப்பட்டுள்ள வங்கி வேலைநிறுத்தம் மற்றும் அக்டோபர் 2 முதல் 4-ந்தேதி வரை வரும் தொடர் விடுமுறை நாட்களாலும், வங்கிகளின் வழக்கமான இயக்கம் பாதிக்கப்படும். இவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் வாரியங்கள், மாநகராட்சிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்துத் துறை தலைவர்களும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சம்பளம் வழங்கும் அலுவலர்கள் இந்த மாதத்திற்கான சம்பளம், ஓய்வூதியம் ஆகியற்றுக்கான பில்கள், பட்டியலை தயாரித்து சம்பளத்தை 25-ந்தேதியன்று வழங்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/bank-employees-strike-tamil-nadu-government-employees-to-receive-salaries-today-itself




