Volledig artikel
இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் இன்று மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்குத் தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பாக்யராஜ் நடித்த படங்களில் சண்டைக் காட்சிகளோ, பிரமாண்ட இன்ட்ரோ காட்சிகளோ இருக்காது. ஆனால், அவர் இயக்கிய படங்களின் மூலம் ஃபேமிலி ஹீரோவாக உருவெடுத்தார். 1984-ல் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், "கமல், ரஜினிக்கு இருக்கிற ப்ளஸ் பாயிண்ட் எனக்குக் கிடையாது" என்பதைக் குறிப்பிட்டு அவர் பேசியிருக்கிறார். Bhagyaraj 24.10.1984 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழுக்குத் பேட்டியளித்திருந்தவரிடம், "வெகுளியான கதாநாயகன், வண்ண வண்ண ஜிகினா உடையில் பிரம்மாண்ட செட்டில் கனவுப் பாடல், கிராமியச் சூழ்நிலை, கற்பு, பண்பாடு. இந்தச் சின்ன வட்டத்துக்குள்ளேயிருந்து எப்ப வெளிய வரப்போறீங்க?" எனக் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பாக்யராஜ், "ஸாரிங்க! நான் எப்படி இருக்கேனோ அப்படித்தான் இருப்பான் என் கதாநாயகன்.... ஜிகினா டிரஸ்ஸில் கனவுப் பாடல் அதை என்னால் தவிர்க்க முடியாது. கமல், ரஜினிக்கு இருக்கிற ப்ளஸ் பாயிண்ட் எனக்குக் கிடையாது. அவங்க 'சினிமாட்டிக் ஹீரோஸ்'. ஒவ்வொரு காட்சியிலேயும் நல்ல 'காஸ்டியூம்ஸ்'தான் போட்டுக்கிட்டு வருவாங்க. அதனால பாடல் காட்சி வரும்போது அவங்களும் விதம் விதமான டிரஸ் சேஞ்ச் பண்ணிக்க முடியும். என்னால முடியாது. ஏன்னா, என் கேரக்டர்கள் எல்லாமே ரொம்ப எதார்த்தமானவை. 'அந்த 7 நாட்கள்’ மாதவன் ரொம்ப ஏழை. அந்தக் கதாபாத்திரத்திற்குச் சங்கீதம் மட்டும்தான் தெரியும். அவனுக்கு வேஷ்டியும் சட்டையும்தான் காஸ்டியூம். அவன் டூயட் பாடும்போது நல்ல 'ரிச்'சா டிரஸ் பண்ண முடியாது. டூயட்டே அவன் கனவில்தான் பாட முடியும். அப்ப அதுக்கேத்த மாதிரி கலர் கலர் டிரஸ் போட வைக்கிறேன். அதே போலத்தான் 'மௌன கீதங்கள்' ஹீரோ. அவன் நடுத்தரக் குடும்பஸ்தன். அவனும் கனவில்தான் பாட முடியும். 'தாவணிக் கனவுகள்' என் சொந்தப் படம். இதில் பாடல் காட்சியில் நிறைய காஸ்டியூம் உபயோகப்படுத்தாட்டி, சொந்தப் படத்தில் மிச்சம் பண்ணிட்டான்னு சொல்வாங்க. Bhagyaraj அதனால கனவுக் காட்சி பாடல் தவிர்க்க முடியாதது. கிராமம், கற்பு, பண்பாடுன்னு ஒரு குறுகிய வட்டம் எனக்குக் கிடையாது. சுவரில்லாத சித்திரங்களிலிருந்து பலவிதமான கதைகள் பண்ணியிருக்கேன். 'டார்லிங், டார்லிங், டார்லிங்' ஒளிப்பதிவாளருக்காக எடுத்த படம். அசோக்குமார் மாதிரி ஒரு கேமராமேன் இருக்கும் போது, அவருடைய திறமையை உபயோகிச்சுக்கணுமேன்னு கதை தேர்ந்தெடுத்தேன். அந்தப் படத்தில் நான் சினிமாட்டிக் ஹீரோ. நீங்க சொல்ற ஜிகினா டிரஸ் அதுல இருக்காது. பொதுவாகவே பாடல் காட்சி படத்தில இருக்கணுங்கிறதுதான் எனக்கு முக்கியம். பாட்டுக்கும், என் படம் ஓடறதுக்கும் சம்பந்தமில்லை. அது ஒரு ப்ளஸ் பாயிண்ட்தான். எனக்குச் சங்கீதத்தில் கூட அவ்வளவு டேஸ்ட் கிடையாது." எனத் தெரிவித்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel — zie link hieronder




