விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டில் பங்கேற்காதது கட்சிக்குள் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. 'ஷாநவாஸிடம் கட்சித் தலைவர் திருமா விளக்கம் கேட்க வேண்டும்' என குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளான ஆகஸ்ட் 17-ம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை ஒருங்கிணைத்தது அக்கட்சி. ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட மிகப்பெரும் குளறுபடியாலும் தொண்டர்களின் அத்துமீறலாலும் மாநாட்டை பாதிலேயே நின்றுபோனது. அதேநேரம் கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஷாநவாஸ் மாநாட்டு பணிகளிலும் பங்கேற்காமல், மாநாட்டுக்கும் வராமல் இருந்துவிட்டார் எனக் குற்றம்சாட்டி வருகிறார்கள் வி.சி.க சீனியர்கள். நம்மிடம் பேசிய சீனியர் சிறுத்தைகள், "வி.சி.க-வின் முதன்மைச் செயலாளர் என்பது தலைவர், பொதுச்செயலாளர் பிறகு மிக முக்கியமான பொறுப்பு. அப்பொறுப்பு வகிக்கும் முன்னாள் எம்.எல்.ஏ ஷாநவாஸ் மாநாட்டுக்கு ஆப்சென்ட்டாகி விட்டார். 2026 சட்டமன்றத் தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் இருந்த அவர், சமீபகாலமாக கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியே இருக்கிறார். இருந்தபோதிலும் மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழுக்களில் அவரது பெயர் இடம்பெற்றது. விசிக மாநாடு - திருமாவளவன் ஆனாலும் அவர் கட்சி பணிக்கு திரும்பவில்லை. த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க இடம்பெற்றிருக்கும் சூழலில், 'தமிழ்நாட்டில் மறைமுக பா.ஜ.க ஆட்சி நடக்கிறது' எனப் பேட்டிக் கொடுத்தவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வந்தார். கருணாநிதி நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர் எங்கள் தலைவரின் பிறந்தநாளன்று நடந்த வி.சி.க மாநாட்டில் பங்கேற்கவில்லை. ஆகையால் 'அவர் ஏன் பங்கேற்கவில்லை. அவர் என்ன முடிவில் இருக்கிறார்?' என ஷாநவாஸிடம் விளக்கம் கேட்ட வேண்டுமென்ற குரல் கட்சிக்குள் எழுந்துள்ளது" என்றனர். நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள் சிலர், "வி.சி.க-வில் அண்மை காலமாக அரங்கேறும் காட்சிகள் வியப்பாகவே இருக்கின்றன. சட்டமன்றத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ் பாலாஜி, பனையூர் பாபு ஆகியோருக்கும் இம்முறை திருமா சீட் கொடுக்கவில்லை. வி.சி.க தலைவருடன் ஏற்பட்ட கருத்து மோதலால் தி.மு.க-வில் இணைந்தார் பனையூர் பாபு. சீட் கிடைக்காத நிலையிலும் பிரசாரத்துக்கு வந்த ஷாநவாஸை தி.மு.க ஆதரவாளர் என்கிற ரீதியில் கட்சியினரே விமர்சிக்கத் தொடங்கியதால் சற்று ஒதுங்கியே இருந்தார் ஷாநவாஸ். இளைஞரணிச் செயலாளர் சங்கத்தமிழன் ஷாநவாஸை குறிவைத்தி தாக்கிப் பேசினார். ஆளூர் ஷாநவாஸ் இந்த சூழலில், த.வெ.க அரசின் குளறுபடிகள் குறித்து அவர் எழுப்பிய கேள்விகள் வி.சி.க-வினரையே உஷ்ணமடைய வைத்துவிட்டன. இச்சூழலில்தான் மாநாட்டுக்கு வந்தால் தேவையற்ற சிக்கல்கள் வரலாம் என ஒதுங்கிவிட்டார். மீண்டும் கட்சிப் பணிகளுக்கு திரும்புவாரா. வி.சி.க-வில் அவர் தொடர்ந்து பயணிப்பாரா. என்றே தெரியவில்லை. கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர். வி.சி.க மாநாட்டில் ஏன் பங்கேற்கவில்லை என்பதற்காக விளக்கத்தை வி.சி.க தலைவர் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/governance/vck-cadres-question-why-shanavas-attended-dmk-meeting-but-skipped-vck-conference




