புதுடெல்லி, ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் ட்ராப் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கம் வென்ற நீரு தண்டாவிற்கு பிரதமர் வாழ்த்து. தங்க பதக்கம் ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டு போட்டியில், துப்பாக்கிச் சுடுதல் மகளிர் டிராப் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை நீரு தண்டா புதிய ஆசிய சாதனையுடன் தங்க பதக்கம் வென்று பிரம்மாண்ட வரலாறு படைத்துள்ளார். சாதனை ஆசிய விளையாட்டு போட்டி வரலாற்றிலேயே மகளிர் டிராப் தனிநபர் பிரிவில் தங்கம் வெல்லும் முதல் இந்திய பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். வரலாற்று சாதனை படைத்த வீராங்கனை நீரு தண்டாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாவது:- முதல் இந்திய பெண் நீரு தண்டா இந்தியாவிற்கு ஒரு வரலாற்றுத் தருணத்தை வழங்கியுள்ளார்! ஆசிய விளையாட்டு போட்டியின் ட்ராப் துப்பாக்கி சுடும் பிரிவில் தனிநபர் தங்க பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்ற அவருக்கு வாழ்த்துகள். ஊக்குவிக்கும் அவரது அபாரமான துல்லியமும் நிதானமும் நாட்டிற்கு அளவற்ற பெருமையை தேடி தந்துள்ளன. இந்த சாதனை, மேலும் பல இளம் விளையாட்டு வீரர்களை துப்பாக்கி சுடும் விளையாட்டில் ஈடுபடவும், மிக உயர்ந்த கௌரவங்களை அடையவும் ஊக்குவிக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/pm-congratulates-neeru-thanda-on-asian-games-gold




